தினம் 5 ரூபாய் போதும்.. 600ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் இலவச ஓடிடி

BSNL Yearly Plans: நாள் ஒன்றுக்கு வெறும் ஐந்து ரூபாய் தான் செலவாகும். நீண்ட காலம் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம். திரும்ப திரும்ப ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு இருக்காது. அந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் என்ன பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2023, 07:09 PM IST
தினம் 5 ரூபாய் போதும்.. 600ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் இலவச ஓடிடி title=

BSNL Prepaid Plans: பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று தான் அத்தகைய ஒரு திட்டம். அந்த திட்டம் உங்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 5 ரூபாய் செலவழித்தால் போதும், நீண்ட கால செல்லுபடி நாட்களை பெறலாம். மேலும் அந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, ஓடிடி மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து அதிக டேட்டாவையும் வழங்குகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். வாருங்கள் அந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.

600ஜிபி டேட்டா:
பிஎஸ்என்எல் நிறுவனம் பல சிறப்பு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இதில் ரூ.1,999 வருடாந்திர ரீசார்ஜ் வவுச்சரைப் பற்றி தான் பேசுகிறோம். அதிக டேட்டா, நீண்டகால வேலிடிட்டி மற்றும் பணத்தையும் சேமிக்கலாம். பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 1,999 வருடாந்திர திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், 600ஜிபி அதிவேக டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதிகள் கிடைக்கும். டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். 

மேலும் படிக்க: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.50 க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் லிஸ்ட்

ஓடிடி சந்தா வசதி:
குரல், தரவு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன், பிஎஸ்என்எல் 1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் டியூன்களையும் வழங்குகிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்களுக்கு இலவச Lokdhun மற்றும் Eros Entertainment சந்தாவையும் பெறுகிறார்கள்.

தினசரி ரூ.5 மட்டுமே செலவாகும்:
நீங்கள் 4ஜி அல்லது 3ஜி நெட்வொர்க் பகுதியில் இருந்தால், 600ஜிபியுடன் இணைந்த இந்த வருடாந்திர மொத்த டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஆண்டு முழுவதும் மொத்த டேட்டா பலன்களைப் பெற தினசரி ரூ.5 மட்டுமே உங்களுக்கு செலவாகும் என்பது சிறப்பு.

மேலும் படிக்க: BSNL சூப்பரான ரீசார்ஜ் பிளான்: வெறும் 269 ரூபாயில் எக்கச்சக்க நன்மைகள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News