அசத்தும் BSNL... மாதம் 200 ரூபாயில் தினம் 2GB டேட்டா...
BSNL நிறுவனம் மலிவான பல ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கினர். BSNL நிறுவனமும்,வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மலிவான பல ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை.
தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் வகையில் அரசுத் துறை நிறுவனமான சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தற்போது 1 வருடத்திற்கும் மேலான வேலிடிட்டி கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை பொறுத்தவரை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக, 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 395 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.2,399 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.2399 Plan)
BSNL வழங்கும் ரூ.2,399 ரீசார்ஜ் திட்டம், 395 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதன் மூலம் உங்கள் மொபைலை ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி பயன்படுத்த முடியும். தினமும் 2ஜிபி அதிவேக இணைய வசதி கிடைக்கும். ஒரு நாளைக்கு 2 ஜிபி வரம்பை தாண்டு போது, உங்கள் இணைய வேகம் குறைந்து 40Kbps ஆக இருக்கும். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் கிடைக்கும்.
மேலும் படிக்க | போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்
நீண்ட கால வேடிடிட்டி கொண்ட திட்டம் என்பதால், இத்துடன் பல இலவச நன்மைகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), ஸிங்க் (Zing), வாவ் என்டர்டைன்மெண்ட் (wow Entertainment) போன்ற பல இலவச நன்மைகள் கிடைக்கும்.
BSNL நிறுவனம் மலிவான கட்டணம் மற்றும் அதிக நன்மைகள் கொண்ட பல குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வழங்குகிறது. BSNL இணையதளத்திற்குச் சென்று உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் பிஎஸ்என்எல் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்தில், BSNL தனது சொந்தமாக உள்ள 15,000+ 4ஜி நெட்வொர்க் டவர்கள் செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அமேசனில் பண்டிகை கால சலுகை... எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ