பிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கை

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2024, 12:24 PM IST
  • தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம்.
  • வாடிக்கையாளர் எவரும் தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை தர வேண்டாம் என BSNL எச்சரித்துள்ளது.
  • போலி இணையதளத்தில் மூன்று பேக்கேஜ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கை title=

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தனியார் தஒலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் அதிகரித்ததன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள் BSNL நிறுவனத்திற்கு மாறுகின்றனர்.

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிஎஸ்என்எல் என்ற பெயரில் ஒரு போலி இணையதளம் செயல்பட்டு வருகிறது என்றும் இந்த இணையதளம் BSNL டவர்களை நிறுவுவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களை ஏமாற்றும் நோக்கிலான அவர்களின் வார்த்தையை நம்பி தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை தர வேண்டாம் என BSNL எச்சரித்துள்ளது. அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...

பிஎஸ்என்எல் பெயரில் மோசடி

போலி இணையதளமான, https://bsnltowerindia.com/page/about-us.html என்ற இணையதளத்திற்கு BSNL நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், இந்த போலி இணையதளம் மூலம் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கையில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்குமாறு பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த போலி இணையதளம் BSNL 5G டவர்களை அமைப்பது என்ற பெயரில் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை கேட்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ.... குறைந்த கட்டணத்தில் தினம் 2GB டேட்டா.... இன்னும் பல நன்மைகள்

பிஎஸ்என்எல் விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடக தளமான X தளத்தில், BSNL போலி இணையதளம் குறித்து மக்களுக்கு எச்சரிக்க விடுத்துள்ளது. அவர் அந்த போலி இணையதளத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, அதைத் தவிர்க்க மக்களுக்கு கீழ்கண்ட வகையில் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது .

 'எச்சரிக்கை! போலியான இணையதளம்: https://bsnltowerindia.com/page/about-us.html என்பது BSNL உடையது அல்ல. கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்... போலி இணையதளங்களுக்கு இரையாகாதீர்கள். சமீபத்திய புதுப்பிப்பு செய்திகளுக்கு எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://bsnl.co.in ஐப் பார்வையிடவும்.

 

போலி இணையதளத்தில் மூன்று பேக்கேஜ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று கிராமப்புறத்துகான பேக்கேஜ், இரண்டாவது புறநகர் பகுதிகளுக்கான பேக்கேஜ் மற்றும் மூன்றாவது நகர்ப்புற பகுதிகளுக்கான பேக்கேஜ். இதில், முன்பணம் ரூ.25 முதல் 35 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், வாடகை ரூ.25 முதல் 55 ஆயிரம் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறானது.

ஒரு இணையதளம் போலியானதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டறிவது?

இணையதள முகவரி: முகவரி "https://" என்று தொடங்குவதையும், இணையதளத்தின் பெயர் சரியாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்தவும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும், யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் சரியான இணையதளத்தின் பெயரில் சிறிய மாற்றங்களைச் செய்கிறார்கள்.

தட்டச்சு தவறுகளைச் சரிபார்க்கவும்: போலி இணையதளங்களில் பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் அல்லது வித்தியாசமான இணையதளப் பெயர்கள் இருக்கும். இணையதளத்தின் உள்ளடக்கம் அல்லது முகவரியில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் கவனம் செலுத்தவும்.

இணையதளத்தின் தரம்: மோசமான வடிவமைப்பு, குறைந்த தெளிவுத்திறன் படங்கள், எழுத்துப்பிழைகள் உள்ள இணையதளங்கள்.

சமூக ஊடகங்கள்: நிறுவனங்கள் பொதுவாக சமூக ஊடகங்களில் அக்டிவ் கணக்குகளை வைத்திருக்கும் கொண்டுள்ளன. எனவே Facebook, Twitter மற்றும் LinkedIn போன்ற தளங்களில் குறிப்பிட்ட இணையதளத்திற்கு கணக்கு உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க | அமேசான் பிரைம் இலவச சந்தா உடன் 168GB டேட்டா ... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ... வாடிக்கையாளர்கள் ஹாப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News