ChatGPT About PM Modi: ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது. அது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, உலகம் முழுவதிலும் இருந்து பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த சாட்பாட் அதன் பயனர்களின் ஒவ்வொரு கேள்விக்கும், கோரிக்கைக்கும் பதிலளிக்கிறது. அவர்களுக்கு ஏராளமான தகவல்களை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு மாணவரோ அல்லது அலுவலகப் பணியாளரோ இந்த ChatGPT சாட்போட்டை யார் வேண்டுமென்றாலும், எந்த வகையிலும் பயன்படுத்தலாம். அது மாணவர்களின் அசைன்மெண்ட்களை செய்யும், மின்னஞ்சல்கள் எழுதும் அல்லது கட்டுரைகளைத் தேடும். அந்த வகையில், நீங்கள் எதை கேட்டாலும் அது தரும்.


மேலும் படிக்க | AI ChatGPT-ஐ பார்த்து பதட்டப்படும் கூகுள்; வருமானம் காலி


இந்நிலையில், பொது நபர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ChatGPT சர்ச்சைக்குரிய/சர்ச்சையற்ற நபர்கள் என்ற இரு வகையில் பிரித்துள்ளது. அதன்படி, அது உருவாக்கிய பட்டியலை அமெரிக்க குடியரசுக் கட்சி உறுப்பினரும், தொழிலதிபருமான ஐசக் லாட்டரெல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


லாட்டரெல் அந்த பதிவில்,"ChatGPT டிரம்ப், எலான் மஸ்க் சர்ச்சைக்குரியவர்கள் என வகைப்படுத்தியுள்ளது. ஜோ பைடன், ஜெப் பெசோஸ் சர்ச்சையற்றவர்கள் என பட்டியலிட்டுள்ளது. என்னிடம் இன்னும் உதாரணங்கள் உள்ளன" என குறிப்பிட்டு, எலான் மஸ்கை டேக் செய்துள்ளார்.  இதற்கு, எலான் மஸ்க் இரண்டு ஆச்சர்யக்குறிகளை பதிவிட்டு பதிலளித்துள்ளார்.


லாட்டரெல் அந்த பட்டியலையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க பிரபலம் கிம் கர்தாஷியன் ஆகியோரை சர்ச்சைக்குரியவர்கள் பட்டியலிலும், அமெரிக்க அதிபர் பைடன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரை சர்ச்சையற்றவர்கள் பட்டியலிலும் சேர்த்துள்ளது. 


மேலும் பலரையும் அது வகைப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும், ஊடக செய்திகள் மூலம் ஆய்வு செய்து தலைவர்கள், பிரபலங்களை இரண்டு வகையில் பட்டியலிட்டுள்ளது. ஊடக செய்திகளின் மேற்கூறியவர்கள் சர்ச்சைக்குரியவர்களாகவும், சர்ச்சையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என ChatGPT கூறுகிறது. 


சர்ச்சைக்குரியவர்கள், சர்ச்சையற்றவர்கள் என்ற ChatGPT இந்த பட்டியலே பெரும் சர்ச்சையை கிளப்பவல்லது என அதை ட்விட்டரில் வெளியிட்ட லாட்டரெல் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | அமேசான் ChatGPT: கூகுள் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ