Cheapest Best Prepaid Plans: இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தைப் பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இதில் தொலைத்தொடர்பு துறையும் விதிவிலக்கல்ல.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் பல திட்டங்களை வழங்குகின்றன. இந்த பதிவில், இந்த நிறுவனங்களின் ரூ.300-க்கும் குறைவான திட்டங்களைப் பற்றி காணலாம்.


ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.129-க்கான இந்த ஏர்டெல் (Airtel) திட்டத்தில், தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. அமேசான் பிரைம் வீடியோவிற்கு மொபைல் சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது.


ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் ரூ.289 திட்டத்தில், 28 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதில், ஏர்டெல் எக்ஸ்-ஸ்ட்ரீம், ஜி5 பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியவற்றின் மொபைல் சந்தாவையும் பெறுவீர்கள்.


299 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் நீங்கள் 30 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதனுடன், Wynk மியூசிக்குக்கான அணுகல் மற்றும் Amazon Prime வீடியோவின் மொபைல் சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படும்.


ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோவின் ரூ.149 திட்டம்: ஜியோவின் இந்தத் திட்டத்தில், ரூ.149க்கு ஈடாக 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய வசதிகளைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும்.


ஜியோவின் ரூ.199 திட்டம்: ரூ.199 விலை கொண்ட இந்த ஜியோ (Jio) திட்டத்தில், தினமும் 1.5ஜிபி இணைய வசதி, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.


ALSO READ:Airtel மற்றும் Vi பிரமாண்டமான திட்டம், முழு விவரம் இதோ 


ஜியோவின் ரூ.249 திட்டம்: இது ஒரு டேட்டா திட்டமாகும். இதில் வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்கிலும் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா ஆகியவற்றைப் பெறலாம். இது மட்டுமல்லாமல், அனைத்து ஜியோ செயலிகளின் சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படும்.


வோடபோன் ஐடியா (Vi) ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரூ.199 திட்டம்: ரூ.199க்கான இந்தத் திட்டத்தின் கீழ், உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படும். அதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.


ரூ.219 திட்டம்: இந்த திட்டத்தில், 28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களைப் பெறுவீர்கள்.


ரூ.299 திட்டம்: Vi இன் இந்த திட்டத்தில், 28 நாட்களுக்கு தினமும் 4ஜிபி இணைய வசதி, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறலாம்.


இவை ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவற்றின் ப்ரீபெய்ட் திட்டங்களாகும். இவை ரூ. 300-க்கும் குறைவான விலையில் பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. உங்களுக்கு எந்த திட்டம் சிறந்ததோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.


ALSO READ:Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR