Jio Prepaid Plans: கடந்த சில ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிகச்சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நிறுவனத்தின் அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும்.
இவை பயனர்களுக்கு குறைந்த செலவில் அதிக நன்மைகளை அளித்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திட்டங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டன. மிகக்குறைந்த விலையில், தினசரி தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும் ஜியோவின் இரண்டு அசத்தலான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரூ. 249 திட்டத்தில் அள்ளித்தரும் ஜியோ
28 நாட்கள் செல்லுபடியாகும் ஜியோவின் (Jio) இந்த ரீசார்ஜ் பேக் தினமும் 2 ஜிபி இணைய வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகிய சேவைகளை வழங்குகிறது. இதனுடன், இந்த பேக்கில் நீங்கள் ஸ்ட்ரீமிங் நன்மைகளையும் பெறுவீர்கள். ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ செயலிகளுக்கும் இலவச அணுகல் இந்த பேக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பேக்கின் விலை ரூ. 249 ஆகும்.
ஜியோவின் ரூ. 599 ரீசார்ஜ் திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ரூ. 599 -ல், வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகிய நன்மைகளைப் பெறலாம். இதனுடன் ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ மியூசிக் போன்ற அனைத்து ஜியோ செயலிகளின் சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.
ALSO READ: Vodafone-Idea அதிரடி சலுகை: ஏர்டெல், ஜியோவை மிஞ்சும் பிளான்!!
ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா திட்டங்களை பின்னுக்குத் தள்ளின
ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை ரூ .249 ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன. ஆனால் அவற்றின் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் ஜியோவின் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை விட குறைவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லின் ரூ .249 ரீசார்ஜ் திட்டமும் 28 நாட்கள் செல்லுபடியாகும். மற்றும் பயனருக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற இலவச அழைப்பு ஆகிய வசதிகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ, விங்க் மியூசிக் மற்றும் ஃப்ரீ காலர் ட்யூனின் சேவைகளையும் பெறலாம்.
மறுபுறம், அதன் ரூ. 249 திட்டத்தில், பயனர்கள் 1.5 ஜிபி தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச அழைப்பு வசதியைப் பெறுகிறார்கள். இதில், லைவ் டிவி மற்றும் திரைப்படங்கள், வார இறுதி தரவு ரோல்ஓவர் மற்றும் பிஞ்ச் ஆல் நைட் ஆகியவற்றுக்கான அணுகலையும் பெறலாம்.
ஜியோ, வோடபோன் ஐடியா (Vi) அல்லது ஏர்டெல்லின் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள, இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வலைத்தளம் அல்லது செயலியை பார்வையிட்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். அல்லது உங்கள் அருகில் உள்ள வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ALSO READ: Jio, Airtel மற்றும் Vi சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: பல நன்மைகளைப் பெறலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR