புதுடெல்லி: அமெரிக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளுக்கு (Apple)அறிமுகம் தேவையில்லை. இந்த நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன்களான iPhones இன்று உலகில் அதிகம் விற்பனையாகும் போன்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் தனது ஐபோனின் புதிய மாடலைக் கொண்டுவருகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 13 ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் இது மிகவும் விலையுயர்ந்த தொலைபேசியாகும். நீங்கள் ஐபோன் வாங்க விரும்பினால், இந்த ஐபோன் 13 ஐ அமேசானில் மிகவும் மலிவாக வாங்க முடியும். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone 13 இல் பெரும் தள்ளுபடியைப் பெறுங்கள்
இந்த ஒப்பந்தத்தில், ஐபோன் 13 இன் (iPhone 13) 128GB மாறுபாட்டைப் பற்றி காண உள்ளோம். இதன் ஒரிஜினல் விலை ரூ.79,900 ஆகும். அமேசானில், இந்த ஆப்பிள் (Apple Smartphones) ஸ்மார்ட்போனில் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த போனின் விலை ரூ.74,900 ஆக குறையும். இந்த போனை வாங்கும் போது, ​​கோடக் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 6 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி (Discount on Amazon) கிடைக்கும். இந்த வங்கிச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், iPhone 13-ன் விலை ரூ.68,900 ஆகும்.


ALSO READ | Flipkart-ல் சலுகை மழை: மிகக்குறைந்த விலையில் iphone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு 


இந்த ஒப்பந்தத்தில் எக்ஸ்சேஞ் சலுகையும் அடங்கும்
இது மட்டுமின்றி, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக ஐபோன் 13ஐ வாங்கினால், ரூ.16,700 வரை அதிகமாக சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெற்றவுடன், இந்த போனின் விலை மேலும் ரூ.68,900ல் இருந்து ரூ.52,200 ஆகக் குறைக்கப்படும். நீங்கள் விரும்பினால், நோ-காஸ்ட் EMIயிலும் வாங்கலாம்.


iPhone 13 இன் அம்சங்கள்
ஐபோன் 13 ஓஎல்இடி சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்களுடன் ஸ்டஅண்டர்ட் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் 10, எச்எல்ஜி எச்டிஆர் மற்றும் டால்பி விஷன் போன்ற ஆதரவுடன் வருகின்றன. பின்புறத்தில் ஒரு சிறிய நாட்ச் மற்றும் குறுக்காக உட்பொதிக்கப்பட்ட கேமரா அமைப்பை பெறுகின்றன.


ஐபோன் 13 ஆனது 6.1 இன்ச் ஸ்க்ரீனைக் கொண்டுள்ளது. இதில் 5ஜி திறன் கொண்ட ஏ 15 பயோனிக் சிப்செட்டை பேக் செய்கிறது. இது அதன் போட்டியாளர்களை விட 50 சதவீதம் வேகமான சிபியு மற்றும் 30% சிறந்த ஜிபியு செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் 13 டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, இதில் 12MP யூனிட்ஸ் உள்ளன. 


12 எம்பி மெயின் சென்சார் ஒரு பெரிய 1.7 மைக்ரான் பிக்சல்கள் மற்றும் எஃப்/1.5 லென்ஸைக் கொண்டுள்ளது, இதனால் முன்பை விட 47 சதவிகிதம் அதிக ஒளியைக் கைப்பற்ற முடியும் என்று ஆப்பிள் கூறுகிறது, அதே நேரத்தில் 12 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் ஆனது எஃப்/2.4 லென்ஸ் மற்றும் 120 டிகிரி எஃப்ஓவி ஆனது 50% அதிக ஒளியை கேப்சர் செய்யுமாம். ஐபோன் 13 அதன் முன்னோடிகளை விட 1.5 மணி நேரம் வரை அதிகம் நீடிக்கும். 


ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,499-க்கு கிடைக்கிறது Mi Smart TV 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR