இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவைப்படாத இடங்களே இல்லை. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆவணங்களின் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவருக்கும் மிகவும் அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் (DigiLocker) என்பது ஒரு வகையான மெய்நிகர் லாக்கர் ஆகும். இது பிரதமர் நரேந்திர மோடியால் ஜூலை 2015 இல் தொடங்கப்பட்டது. இதில், உங்கள் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை PDF, JPEG அல்லது PNG வடிவத்தில் இந்த தளத்தில் பதிவேற்றுவதன் மூலம் சேமிக்கலாம். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் இந்த ஆவணங்களில், நீங்கள் டிஜிட்டல் கையொப்பம் இடலாம். 


டிஜி லாக்கரில் வைத்தால், உங்கள் பான் (PAN)  மற்றும் ஆதார் அட்டை (Aadhaar Card), பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்கள் காகித வடிவில், அட்டை வடிவில் வைத்திருக்கும் போது தொலைந்து போகும் வாப்பு உள்ளது. இதில், தொலைந்து விடுமே என்ற கவலையே தேவையில்லை. அரசின் டிஜி லாக்கரில், பத்திரமாக சேமித்து வைக்கலாம்.


 டிஜி லாக்கரை உபயோகிப்பது எப்படி


1. இதற்காக நீங்கள் முதலில் டிஜிலோக்கரின் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் டிஜிலாக்கர் DigiLocker செயலியை பதிவிறக்கவும்.


2. இப்போது உங்கள் ஆதார் அட்டை அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தி உங்களுக்கான கணக்கை, அதாவது பயனர் ஐடியை உருவாக்க வேண்டும். இப்போது உங்கள் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.


3. செயலியை ஓபன் செய்த பிறகு, Get Started என்ற ஆப்ஷனை  நீங்கள் காண்பீர்கள், அதை க்ளிக் செய்யவும்.


4. பின்னர் Create Account என்பதை க்ளிக் செய்யவும். இதற்குப் பிறகு உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், செக்யூரிட்டி பின், இ-மைல் ஐடி மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும்.


5. இவற்றை செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். செயலியில் இந்த OTP ஐ சமர்ப்பிக்கவும்.


6. பின்னர் உங்கள் கணக்கை திறக்க ஒரு பயனர் பெயரை உருவாக்குமாறு கேட்கப்படும். இங்கே நீங்கள் விரும்பும் எந்த ஒரு பயனர்பெயரையும் உருவாக்கலாம். பின்னர் கீழே OK என்பதைத் க்ளிக் செய்யவும். உங்கள் கணக்கு தொடங்கப்பட்டு விடும்.


ALSO READ | Aadhaar Card: ஒரு ஆதார் அட்டை மூலம் எத்தனை புதிய SIM வாங்கலாம் என்பது தெரியுமா..!

7. இப்போது டிஜிலாக்கரின் இண்டர்பேஸ் உங்களுக்கு முன்னால் தோன்றும். நீங்கள் இங்கே சேமிக்க விரும்பும் எந்த ஆவணத்தின் மீது க்ளிக் செய்யவும்.


8. இதற்குப் பிறகு ஒரு பாப்-அப் திரை உங்கள் முன் தோன்றும், அதில் உங்களிடம் அனுமதி கேட்கப்படும். அதில் OK என்பதை க்ளிக் செய்யவும்.


9. சரி பிறகு, உங்களுக்கு மீண்டும் OTP எண் அனுப்படும், அதை உள்ளிடவும். Continue என்பதைத் க்ளிக் செய்யவும்.


10. இதன் பின்னர் ஆதார் அட்டையை சேமிக்க பதிவேற்றிய பிறகு உங்கள் ஆதார் அட்டை சேமிக்கப்பட்டுள்ளதை நீங்கள் காண முடியும்.


11. அதே போன்று, உங்கள் பான் கார்டு, எல்.ஐ.சி ஓட்டுநர் உரிமம், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றை இங்கே சேமிக்க முடியும்.


12. இந்த ஆவணங்களையும் நீங்கள் பகிர முடியும். இவற்றை PDF வடிவத்தில் நீங்கள் அனுப்பலாம்.


ALSO READ | எச்சரிக்கை! ‘இந்த’ 8 Android செயலிகள் உங்கள் போனை காலி செய்து விடும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR