புதுடெல்லி: கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள குறிப்பிட்ட எட்டு செயலிகளை ஜோக்கர் மால்வேர் (Joker malware) என்னும் மிகவும் ஆபத்தான தீம்பொருள் பாதித்துள்ளது. இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால், உங்கள் தரவுகள் அனைத்தும் திருடப்படுய்வதோடு, போனும் முடங்கி போகலாம். Quick Heal Security Labs மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட 8 செயலிகளில் ஏதேனும் உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டிருந்தால், அதை உடனே நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. செயலியை நீக்க சில விநாடிகளுக்கு செயலியின் ஐகானை அழுத்தி நீக்கலாம். அதோடு, தனித்தனியாக, உங்கள் சாதனங்களிலிருந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஜோக்கர் தீம்பொருள் (Joker malware) செயலிகளை அகற்ற உங்கள் தொலைபேசியில் உள்ள் செட்டிங்க்ஸ் பிரிவுக்கு செல்லலாம்.
கூகிள் பிளே ஸ்டோர் இந்த எட்டு செயலிகளையும் நீக்கியுள்ளது. Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers மற்றும் Super SMS ஆகியவை இந்த 8 மிக ஆபத்தான செயலிகள் ஆகும்.
ALSO READ | Swiggy: இனி டெலிவரி பாய் அல்ல; ட்ரோன்கள் உங்கள் வீட்டு கதவை தட்டலாம்..!!
ஜோக்கர் தீம்பொருள் (Joker malware) கொண்ட செயலிகளை கூகிள் (Google) அவ்வப்போது அகற்றினாலும், சில மாதங்களுக்குப் பிறகு எப்போதும் பதுங்கிய அந்த மால்வேர் மீண்டும் வேறு வழியில் புத்துயிர் பெறுவது அடிக்கடி நடக்கிறது என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.
மால்வேர் அதன் குறியீட்டை மாற்றுவதன் மூலம் மீண்டும் மீண்டும் வருகிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களின் இயக்கதை முடக்கும் வல்லமை இந்த ஜோக்கர் மால்வேருக்கு உண்டு. Android பயனர்களின் தரவைத் திருடவும் இந்த மால்வேர் பயன்படுகிறது. எஸ்எம்எஸ் (SMS ) மற்றும் ஓடிபிக்கள் (OTP) போன்ற தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கிறது என்று சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தீம்பொருள் (Malware) கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது.
ALSO READ | WhatsApp மெஸ்சேஜ் அனுப்புகையில் எழுத்துருக்களை மாற்றுவது எப்படி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR