இ-காமர்ஸ் வலைத்தளமான Flipkart இல், தினமும் சில விற்பனை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பல பொருட்களுக்கு என பல சாதனங்களில் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதன்படி தற்போது Flipkart Big Billion Days Sale ஆறாம்பம் ஆக உள்ளது. இது குறித்து முழு விவரம் இங்கே பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Flipkart Big Billion Days Sale விரைவில் ஆரம்பம்
விற்பனைக்கான டீசர் பக்கம் இணையதளத்தில் நேரலையாகிவிட்டது. டீசர் பக்கம் நேரலையில், பிளிப்கார்ட் (Flipkart Big Billion Days Sale) பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Oppo அறிமுகம் செய்கிறது Oppo A53s: நம்ப முடியாத விலை, அட்டகாச அம்சங்கள்


சலுகைகளின் விவரம் இங்கே:
ஃப்ளிப்கார்ட்டின் கூற்றுப்படி, நோக்கியா ஸ்மார்ட் டிவி இயங்கும் ஆண்ட்ராய்டு 11, ரியல்மி 4 கே கூகுள் டிவி ஸ்டிக், புதிய லெனோவா குரோம் புக்ஸ், ஏசர் கேமிங் லேப்டாப்கள் மற்றும் ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற பல தயாரிப்புகளுக்கு நிறைய தள்ளுபடி இருக்கும். ஆப்பிள், ஒப்போ மற்றும் விவோவின் தயாரிப்புகளிலும் சலுகைகள் கிடைக்கும்.


தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் என்ன
பிளிப்கார்ட் இல் வழக்கமான தள்ளுபடி மட்டுமின்றி ஆக்ஸிஸ் வங்கி,  ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத்தள்ளுபடியும் உண்டு. மேலும், போட் ஹெட்போனுக்கு 80% வரை அப்டூ ஆஃபர் வழங்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல ஸ்மார்ட் வாட்சுகளுக்கும், டிசோ பிராண்ட வைர்லஸ் ஹெட்போனுக்கு அப்டூ 60% வரையிலான தள்ளுபடி என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டல் லேப்டாப்புக்கு 40% வரை அப்டூ ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. 


குறிப்பிட்ட தள்ளுபடி நாட்களில் இரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு புது தள்ளுபடி அறிவிப்புகளை ப்ளிப்கார்ட் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Oppo A53 5G பம்பர் செய்தி: 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்தது விலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR