Flipkart Black Friday Sale: பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனை தொடங்கிவிட்டது. இந்த விற்பனை நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து பிராண்டின் ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆப்பிள் ஐபோன் மீது இந்த சேலில் அதிக கிரேஸ் உள்ளது. இந்த விற்பனையில், ஐபோனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். ஐபோன் 13 -ஐ வாங்க திட்டமிட்டிருந்து, குறைவான பட்ஜெட் காரணமாக தயக்கத்தில் உள்ளவர்கள், இந்த விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனையில் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்காத விலையில், ஐபோன் 13-ஐ வாங்க முடியும். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். 


Flipkart Black Friday Sale: ஐபோன் 13 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


ஐபோன் 13 (128ஜிபி) இன் வெளியீட்டு விலை ரூ.69,900 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இது ரூ.65,999க்கு விற்கப்படுகிறது. போனில் ரூ.3901 முழுமையான தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் இந்த விறனையில் உள்ளன. இதன் காரணமாக போனின் விலை கணிசமாகக் குறைந்துவிடும். 


மேலும் படிக்க | Vi போஸ்ட்பெய்ட் பயனர்களா நீங்கள்! அப்போ உடனே இத படிங்க 


Flipkart Black Friday Sale: ஐபோன் 13 வங்கி சலுகை


வாடிக்கையாளர்கள் ஐபோன் 13 ஐ வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.3,300 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.62,999 ஆகக் குறையும். 


Flipkart Black Friday Sale: ஐபோன் 13 எக்ஸ்சேஞ்ச் சலுகை


ஐபோன் 13 இல் ரூ.17,500 மதிப்பிலான பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியைப் பெறலாம். எனினும், இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருப்பதையும், போனின் மாடல் சமீபத்திய மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். 


பிளிப்கார்ட்டின் இந்த தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் பெற முடிந்தால், அட்டகாசமான இந்த போனை வெறும் ரூ.45,499-க்கு வாங்கலாம். இந்த அட்டகாசமான சலுகையை வாடிக்கையாளர்கள் நாளை வரை பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும் படிக்க | Whatsapp Data Breach: ஷாக்கில் வாட்ஸ்அப் பயனர்கள்! 500 மில்லியன் பயனர்களின் தரவு கசிந்தது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ