"கனவை நினைவாக்க சரியான நேரம்" ஐபோன் 14-க்கு ரூ. 22,000 தள்ளுபடி

iPhone 14: ஐபோன் 14 ரூ. 22,000 குறைண்ட விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையை பயன்படுத்தி இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2022, 06:24 PM IST
  • ஐபோன் 14 ஸ்மார்ட்போனை 22,000 ரூபாய் குறைத்து வாங்கலாம்.
  • ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 79,900 & அமேசான் டீலில் ரூ.57,100.
  • HDFC பேங்க் கார்டு மூலம் வாங்கினால் கேஷ்பேக் & எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.
"கனவை நினைவாக்க சரியான நேரம்" ஐபோன் 14-க்கு ரூ. 22,000 தள்ளுபடி title=

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 8 அன்று ஐபோன் 14 தொடரில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதில் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்திய இந்த ஸ்மார்ட்போன்களில் A15 பயோனிக் சிப்செட் வசதி வழங்கியுள்ளது. இது ஆப்பிளின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிப்செட் ஆகும். நீங்கள் ஐபோன் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்களா, ஐபோன் 14 தொடரின் அதிக விலை காரணமாக உங்களால் வாங்க முடியவில்லை என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் ஐபோன் 14 ஸ்மார்ட்போனை 22,000 ரூபாய் குறைத்து வாங்கலாம். குறைந்த விலையில் ஐபோன் 14 போனை எப்படி வாங்குவது என்பதைக் தெரிந்துக்கொள்ளுங்கள். 

ஐபோன் 14 குறைந்த விலையில் எப்படி வாங்குவது?
இந்த ஆஃபர் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளமான அமேசான் (Amazon) ஐபோன் 14 போன் மாடல் 22,000 ரூபாய் குறைந்த மலிவான விலையில் விற்பனைக்கு இருக்கிறது. இந்த சலுகை iPhone 14 இன் 128ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது. ஐபோன் 14 இன் இந்த மாடலின் விலை ரூ. 79,900 ஆகும். ஆனால் அமேசான் டீலில் ரூ.57,100க்கு வாங்க முடியும்.

ஐபோன் 14 போனுக்கு கிடைக்கும் மற்ற சலுகைகள்:
அமேசான் தளத்தில் ஐபோன் 14-க்கு கிடைக்கும் நேரடி தள்ளுபடி தவிர, மேலும் சில சலுகைகளை பெறலாம். அதாவது HDFC பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தி போனை வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் மற்றும் ரூ.16,300 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

மேலும் படிக்க: நம்ப முடியாத விலையில் ஐபோன் 12: பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி

ஐபோன் 14 அம்சங்கள்:
இந்த ஐபோன் 14 மாடலில், 2532x1170 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட A15 பயோனிக் சிப்செட் கிடைக்கும். ஐபோன் 14 மிட்நைட், ஊதா, ஸ்டார்லைட், ப்ரொடக்ட் சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது.

ஐபோன் 14 கேமரா:
இந்த பாடலில் 12 எம்பி முதன்மை சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிக்காக 12 எம்பி ட்ரூடெப்த் கேமரா உள்ளது. இதன் மூலம் 4கே டால்பி விஷன் ஆதரவுடன் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் படிக்க: ஸ்மார்டா யோசிச்சா 22 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட் டிவி ரூ.1000-க்கு வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News