Flying Cars: உலகுக்கு முதல் பறக்கும் காரை பரிசளிக்கவுள்ளதா சென்னை?
உலகின் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பறக்கும் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சாலைகளில் அதிகரித்து வரும் வாகனங்களால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் சிக்கலில் உள்ளன. போக்குவரத்து பிரச்சனை உலகம் முழுவதும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
இந்தியாவில் டெல்லி-மும்பை போன்ற பெரிய நகரங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சாலை நெரிசல்களால் பாதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு ஒரு மாற்று பிறக்காதா என்ற ஏக்கம் பலரிடம் உள்ளது.
சாலை நெரிசலில் (Traffic) சிக்கிக்கொள்ளாமல் பயணிக்க, காற்றில் பறக்கும் கார் இருந்தால் நன்றாக இருக்கும் என பலர் ஏங்கி இருப்பார்கள். உலகின் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த ஏக்கத்தை நிஜமாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
முதல் ஹைப்ரிட் கார் சென்னையில் உற்பத்தி செய்யப்படும்
பறக்கும் கார்களை தயாரிக்கும் முயற்சிகள் பல நாட்களாக நடந்து வருகின்றன. ஆனால் பறக்கும் கார்கள் எப்போது அறிமுகம் ஆகும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. சென்னையைச் (Chennai) சேர்ந்த Vinata Aeromobility என்ற நிறுவனம் இந்தியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ALSO READ: Humble One: சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!!
கடந்த மாதம், செப்டம்பரில், வினாடா ஏரோமொபிலிட்டியின் கான்செப்ட் மாடலை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் (Minister of Civil Aviation) ) ஜோதிராதித்யா சிந்தியா மதிப்பாய்வு செய்தார். கடந்த மாதம் வினதா ஏரோமொபிலிட்டி தனது இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்சியின் கான்செப்ட் மாடலை அமைச்சர்களுக்கு முன் காட்டியது. நிறுவனம் இந்த திட்டத்தில் வெற்றி பெற்றால், இது ஆசியாவின் முதல் பறக்கும் ஹைப்ரிட் காராக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பறக்கும் கார் மூலம் பல தேவைகள் பூர்த்தியாகும்
உலகின் பல நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த பறக்கும் காரை (Cars) உருவாக்க முயற்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் இந்தியா அல்லது வேறு ஏதாவது நாடு, பறக்கும் கார் தயாரிப்பதில் வெற்றி பெற்றால், அது உலகிற்கு பெரிய வெற்றியாக இருக்கும்.
முக்கியமாக, மருத்துவ அவசர நிலையில் இந்த பறக்கும் கார்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இதைத் தவிர, இந்த பறக்கும் காரை பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த கனவு நிஜமாக எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் இந்த திட்டம் உலகிற்கு மிகவும் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை.
ALSO READ: Mahindra XUV 700 கசிந்த தகவல்கள்: அனைத்து பெட்ரோல், டீசல் வகைகளின் ஒப்பீடு இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR