Helmet: இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்டும் இலவசம்!

இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்கள், ஹெல்மெட்டை இலவசமாக கொடுக்க வேண்டும். அதுவும் ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டாக இருக்க வேண்டும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2021, 04:24 PM IST
  • இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்டும் இலவசம்
  • விபத்துகளின் பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை
  • விற்பனையாளர்கள் இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் கொடுக்காவிட்டால் அபராதம்
Helmet: இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்டும் இலவசம்!  title=

சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது சட்டத்துக்காக மட்டுமல்ல, அவர்களின் விலை மதிப்பான உயிருக்கு பாதுகாப்புக்காகவும் தான். இதை அனைவரும் உணர்ந்துக் கொண்டால் பிரச்சனைகளும் இல்லை, விபத்துக்களும் குறையும். விபத்து நிகழ்ந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

ஆனால், சட்டம் என்று ஒன்று கட்டுப்படுத்தினால் தான் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலானவர்கள் இருப்பதால், அரசு ஏற்கனவே இருக்கும் விதிகளில் அவ்வப்போது மாற்றங்களை செய்கிறது. 

தற்போது, இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்கள், ஹெல்மெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுவும் ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை எந்த மாநிலம் வழங்கியிருக்கிறது தெரியுமா?

Also Read | தமிழ்நாட்டின் முதல் போக்குவரத்து பூங்கா கோவையில்

ராஜஸ்தான் மாநில அரசு தான் இந்த கடும் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் போது இலவச ஹெல்மெட் வழங்காத டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ராஜஸ்தான் அரசு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உரிய முறையில் பின்பற்றுகிறார்களா என்பதை அனைத்து மாவட்டங்களின் போக்குவரத்து அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை ராஜஸ்தான் மாநில அரசு போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ்,  வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் இந்த உத்தரவை மீறக்கூடாது என்றும், அப்படி செய்தால் சாலை பாதுகாப்பு கண்ணோட்டத்தில் கடுமையான தவறு என்ற பிரிவின் கீழ் குற்றமாகும் என்றும் தெரிவித்தார்.

Also Read | போலீசார் போக்குவரத்து விதிகளை மீறினால் இருமடங்கு அபராதம்

இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் போது இலவச ஹெல்மெட் வழங்காத  விநியோகஸ்தர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இரு சக்கர வாகனங்களை புதிதாக வாங்குபவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்குவது குறித்து நடந்த கூட்டத்தில் ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அதற்கு ஒப்புக்கொண்டதாக போக்குவரத்து அமைச்சர் கச்சாரியாவாஸ் கூறினார்.

இருசக்கர வாகனம் முதன்முதலில் விற்பனை செய்யப்படும் போது, மோட்டார் வாகனச் சட்டம், 1988 பிரிவு 129 ன் கீழ் விநியோகஸ்தர்கள் இலவச ஹெல்மெட் வழங்க வேண்டும். 

சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில், அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களுக்கும் தலைக்கவசம் வழங்குவதை ராஜஸ்தான் அரசு கட்டாயமாக்கியது. இது தொடர்பான திருத்த முன்மொழிவு ஏப்ரல் மாதம் அங்கீகரிக்கப்பட்டது.

Also Read | தமிழக அரசு முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவதன் பின்னணி என்ன

சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். அதிலும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விபத்தில் உயிரிழக்கும் அபாயம் அதிகமாக இருக்கிறது. எனவே பாதுகாப்பிற்காக தலைக்கவசம் அணிந்தால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்பைக் குறைக்கலாம்.

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை கணிசமாக அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

தற்போது புதிய இருசக்கர வாகனங்களை வாங்கும்போது ஹெல்மெட் கொடுக்கப்படும் முடிவானது சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க உதவும் என்று ராஜஸ்தான் அரசு நம்புகிறது.

Also Read | நடனமாடி போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் MPA மாணவி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News