சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!
Smartphone Launches in July 2024: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சாம்சங் முதல் நத்திங் வரை ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன.
Smartphone Launches in July 2024: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண இயலாது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன. வாடிக்கையாளர்களும் அது குறித்த விபரங்களை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஜூலை 10ம் தேதி, சாம்சங் நிறுவனம் மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதே நேரத்தில் நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனைக் அறிமுகப்படுத்தும். இவை தவிர, பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தைக்கு வர உள்ளன.
CMF ஃபோன் 1 (CMF Phone 1)
நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டான CMF, தனது முதல் ஸ்மார்ட்போனான CMF Phone 1 மாடலை ஜூலை 8ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. 8GB RAM உடன் 8GB விர்ச்சுவல் ரேமிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த போன் ரூ.20,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்டில் இதனை வாங்கலாம்.
Redmi 13 5G
Xiaomi நிறுவனம் Redmi 13 5G ஸ்மார்ட்போனை ஜூலை 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பட்ஜெட் ஃபோன் கிரிஸ்டல் கிளாஸ் டிசைனைக் கொண்டிருக்கும். 108 எம்பி டூயல் ரியர் கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அமேசான் இந்தியாவில் இதன் விலை ரூ.15,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy Z Fold 6 மற்றும் Samsung Galaxy Z Flip 6
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி போன்கள் ஜூலை 10 ஆம் தேதி பாரிஸில் அறிமுகப்படுத்தபட உள்ளது. மடிக்கக்கூடிய வகை தொலைபேசிகளான Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 ஆகிய இரண்டு மாடல்களும் ஏற்கனவே இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. Galaxy Z Fold 6 இன் விலை சுமார் ரூ.1,50,000 என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் Galaxy Z Flip 6 ரூ.80,000 என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்
Tecno Spark 20 Pro 5G
டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஜூலை 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது, இது 6.78 இன்ச் எல்சிடி பேனல், எஃப்எச்டி+ ரெசல்யூஷன், 108எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு ஆகிய அமசங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் சுமார் ரூ.15,000 விலையில் வாங்கலாம் என கூறப்படுகிறது.
Moto G85 5G
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனை ஜூலை 10ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தொலைபேசி 6.67-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இதன் விலை சுமார் ரூ.30,000 என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பிளிப்கார்டில் வாங்கலாம்.
Lava Blaze X
லாவா இந்தியாவில் ஜூலை 10 ஆம் தேதி பிளேஸ் எக்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்பிளே மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. சரியான விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இது Amazon India இல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oppo Reno 12
ஒப்போ ரெனோ 12 சீரிஸ் இந்தியாவில் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Reno 12 மற்றும் Reno 12 Pro ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த மாடல்களில், AI அம்சங்கள் நிறைந்திருக்கும். பிளிப்கார்ட் மற்றும் ஒப்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த போன்களை வாங்கலாம்
மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்போன்களைத் தவிர, 2024 ஜூலை மாதத்தில், OnePlus Nord 4, Samsung Galaxy M35, OnePlus 12T உட்பட பல போன்கள் அறிமுகம் ஆக உள்ளன.
மேலும் படிக்க | மின்சார பில் கையைக் கடிக்கிறதா? கவலையை போக்கி பர்ஸை பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ