மின்சார பில் கையைக் கடிக்கிறதா? கவலையை போக்கி பர்ஸை பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!

Electricity Bill Reducing Tips : மின்சார கட்டணம் அதிகமாக உள்ளது என்று கவலைப்படுபவர்களுக்கு இந்தக் கட்டுரை உதவியானதாக இருக்கும்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2024, 09:42 AM IST
  • மின்சார கட்டணம் அதிகமா?
  • சோலார் பேனல் இருந்தால் மின்சார கட்டணம் குறையும்
  • மாதச் செலவுகளை குறைக்க டிப்ஸ்
மின்சார பில் கையைக் கடிக்கிறதா? கவலையை போக்கி பர்ஸை பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்! title=

மாதாந்திர செலவுகளில் இன்று முக்கிய இடம் பிடித்திருப்பது மின்சாரத்திற்கு நாம் ஒவ்வொருவரும் கட்டும் கட்டணம் ஆகும். மின்சாரக் கட்டணத்தை குறைத்து உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் பல வழிகள் உள்ளன. கட்டணம் அதிகமாக உள்ளது என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு மின்சாரக் கட்டணம் பெரும் செலவாக இருப்பதால், இந்தக் கட்டுரை அனைவருக்கும் உதவியானதாக இருக்கும்.

மின் கட்டணத்தை குறைக்கும் டிப்ஸ்

எல்இடி விளக்கு பயன்பாடு

பழைய பல்புகள் அதிகமாக மின்சாரத்தை குடிக்கும். ஆனால், அவற்றுடன் ஒப்பிடும்போத எல்இடி பல்புகளில் 75% வரை மின்சாரம் குறைவாகவே பயன்படுத்தப்படும். அதோடு, பகலில் முடிந்தவரை மின்சார விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்,  அறையில் இருந்து வெளியில் செல்லும்போது மின்விசிறிகள் மற்றும் விளக்குகளை அணைக்கவும்.

மின்சார பொருட்களை வாங்கும்போது கவனம் தேவை

குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் பொருட்களை வாங்குவது மின்சாரத்தை சேமிக்க சிறந்த வழியாகும். மின்சாரத்தில் இயங்கும் ஒரு புதிய பொருளை வாங்கும் போது, ​​அதில் எனர்ஜி ஸ்டார் லேபிள் என்னவென்பதைப் பார்க்கவும். ஏனென்றால், ஒரு மின்சார பொருளின் ஸ்டார் ரேட்டிங், அதன் மின்சார நுகர்வைக் குறிக்கும்.

பயன்படுத்தாத பொருட்கள்

பல எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தப்படாதபோதும், தொடர்ந்து குறைந்த அளவிலான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன, இது "காத்திருப்பு சக்தி" (standby power) என்று அழைக்கப்படுகிறது. எனவே மின்சாரப் பொருட்களை பயன்படுத்தாதபோது, ​​அவற்றின் பிளக் பாயிண்டை நீக்கி விடுங்கள். இதனால் மின்சாரம் வீணாவது தடுக்கப்படும், அது மின்சார கட்டணத்தைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க | Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்

வீட்டின் கதவை மூடி வைக்கவும்

வீட்டில் சரியான வெப்பநிலையை பராமரிக்க, வீட்டின் கதவுகளை மூடி வைக்கவும். அதோடு, திரைச்சீலைகளை பயன்படுத்தவும். இதனால் ஹீட்டர் அல்லது ஏசி பயன்பாடு குறையும். இதனால் மின்சாரப் பயன்பாடு குறைவதால், மின் கட்டணங்கள் குறையும்.

ஏசியை பராமரிக்கவும்

வெப்பமூட்டும், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (HVAC) அமைப்புகளை பராமரிப்பது அவசியம். தேவைப்படும்போது ஏர் ஃபில்டரை தவறாமல் மாற்றிவிடவும். ஆண்டுதோறும் மின்சாரப் பொருட்களை சர்வீஸ் செய்யவும். பராமரிக்கப்படும் HVAC என்பது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் என்பதால் உங்கள் பணம் மிச்சப்படும்.

ஏர் கண்டிஷனரில் மிகவும் குறைவான வெப்பநிலை வைத்தால் மின்சாரம் அதிகமாக பிடிக்கும். ஒரு டிகிரி வெப்பநிலையும் சுமார் 6 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும், அதாவது 24 டிகிரி வெப்பநிலை என்பது இயல்பாக இருக்கும் நிலை என்றால், அதனை 23 என்று மாற்றினால், அவக்கத்தைவிட ஆறு சதவிகிதம். மின்சார கட்டணம் அதிகரிக்கும். எனவே ஏர் கண்டிஷனரின் சராசரி வெப்பநிலையை 24 ° C ஆக வைப்பது நல்லது.  

சூரிய மின்சார பயன்பாடு

வீட்டுக் கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவது நல்லது. அரசு மானியம் கிடைக்கும் என்பதால் மின்சாரக் கட்டணம் குறையும்.  கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு செலவாகும் என்றாலும், இதற்கு அரசு கொடுக்கும் மானியம் நீண்டகால அடிப்படையில் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். 

மேலும் படிக்க | ஹைபிரிட்? இல்லை மின்சாரக் கார்! உங்களுக்கு ஏற்ற கார் எது? அலசி ஆராயும் சிறப்பு கட்டுரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News