Google Play Store Loan App Scam: சமீபகாலமாக, கடன் வழங்கும் செயலிகள் அதிகமாக செயல்பட தொடங்கிவிட்டன. இந்த செயலிகளின் விளம்பரங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. ஆனால் இத்தகைய செல்யலிகளை குறித்து மிகவும் எச்சரிக்கையாக உள்ள கூகுள், இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் உள்ள ப்ளே ஸ்டோரிலிருந்து கடன் வழங்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை நீக்கியுள்ளது. இந்த செயலிகள்,  நிபந்தனைகளை மீறுதல், தவறான தகவல்களை வழங்குதல் மற்றும் அவற்றின் ஆஃப்லைன் நடத்தை சந்தேகத்திற்குரியதாக கண்டறியப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வரும் வாரங்களில் கடன் வழங்கும் செயலிகள் தொடர்பான கொள்கைகளை கடுமையாக்க முயற்சிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர் பாதுகாப்பு


கூகுள் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மூத்த இயக்குநரும் பாதுகாப்புத் தலைவருமான சாய்கத் மித்ரா, கடன் வழங்கும் செயலிகள் பற்றி தெரிவித்த கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கூகுள் நிறுவனம் செயல்படும் அனைத்து பிராந்தியங்களிலும் விதிமுறைகளுக்கு இணங்கவே செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்ய உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். டிஜிட்டல் தளங்களில் ஆன்லைன் மோசடியைத் தடுக்க போதுமான முயற்சிகள் குறித்த பேசிய அவர், கூகுளின் முன்னுரிமை மற்றும் அதன் கவனம் எப்போதும் பயனர்களின் பாதுகாப்பைச் சுற்றியே உள்ளது என்றார்.


மேலும் படிக்க | ரூ.15,000-க்குள் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியுமா?


“ஜனவரி முதல் தற்போது வரை, இந்தியாவில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரில் கடன் வழங்கும் 2,000க்கும் மேற்பட்ட ஆப்களை அகற்றியுள்ளோம். கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தகவல்கள், கொள்கை மீறல், தகவல் இல்லாமை மற்றும் தவறான தகவல் வழங்குவது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
லோன் ஆப் பிரச்சனை உச்சத்தில் இருப்பதாகவும், பிரச்சினையில் கவனம் செலுத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். இன்னும் சில கொள்கை அளவிலான மாற்றங்களைச் செய்ய உள்ளோம், அவை இன்னும் சில வாரங்களில் வெளிவரும் என்று சைகத் மித்ரா கூறினார். வெவ்வேறு பிராந்தியங்களில் இந்த செயலிகளில் வேறுபட்ட சிக்கல் இருப்பதாக அவர் கூறினார்.


நாட்டுக்கு நாடு கடன் விஷயத்தில் வெவ்வேறு நிலைப்பாடு இருக்கும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க சந்தையில் உள்ள செயலிகளை பயன்படுத்தி கடன்கள் வாங்குபவர், அதை திருப்பி கொடுக்காத சிக்கல் உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவில் கடன் வழங்கும் செயலிகள் தவறான விளக்கம், கொள்கைகளை வைத்திருக்கின்றன, அதோடு விதிமுறைகளுக்கு இணங்காதது ஆகியவற்றை முக்கியமான சிக்கலாக சொல்லலாம். 


மேலும் படிக்க | 


கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம் - சைபர் குழு எச்சரிக்கை!


இணைய அச்சுறுத்தல்கள் குறித்த எச்சரிக்கை


புதிதாக விதிகள் வரும்போதெல்லாம் அரசு மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து செயல்படுகிறோம். தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மதிக்கும் இலக்குகளை அடைய நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம் என்று உணர்கிறோம். இதை அடைய எங்கள் கொள்கைகள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று புதிய விதிகள் மற்றும் அரசு கொள்கைகள் குறித்து மித்ரா தெரிவித்தார். 


இந்தியாவில் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து கூகுள் புதிய முதல் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த முன்முயற்சிகளில், கிட்டத்தட்ட 100,000 டெவலப்பர்களை திறமையாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது கூகுள். பல நகரங்களில் சைபர் செக்யூரிட்டி ரோட்-ஷோக்கள் நடத்தப்படுகின்றன. Google.org இலிருந்து $2 மில்லியன் டிஜிட்டல் பாதுகாப்பு சார்ந்த நிதியை சிவில் நிறுவனங்களுக்கு வழங்ங்கப்பட்டுது.


இந்த முயற்சிகள் அனைத்தும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் கூட்டுத் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று கூகுள் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | Whatsapp புதிய அம்சம்: இனி இதை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது, பாதுகாப்பு பலமானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ