கூகுள் தனது சமீபத்திய "சேஃபர் இந்தியா" நிகழ்வை நடத்தியது. அதில் நிறுவனம் இணைய பயனர்களைப் பாதுகாப்பதற்கான எடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு முயற்சிகள் குறித்து பேசியது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 700 மில்லியன் பயனர்கள் ஆன்லைனில் இருப்பதாக தெரிவித்த கூகிள், இது கடந்த ஒரு வருடத்தில் 600 மில்லியனில் இருந்து 100 மில்லியன் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பிற்கான புதிய பிரச்சாரங்களை கூகிள் கொண்டு வருகிறது என கூறியுள்ளது. குறிப்பாக , ஆன்லைன் பண மோசடிகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவது குறித்து பெரும் முயற்சி எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக நார்டன் அறிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. 


பலர் தவறான மின்சார வாரிய செய்திகளைப் பெறுவது மற்றும் வேலை வாய்ப்பு சுயவிவரங்கள் லிங்க் மூலம் இந்த மோசடிகள் பெருமளவில் நடப்பதாக எச்சரித்துள்ள கூகுள், அதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் யூசர்கள் பிரச்சனையில் சிக்குவதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து அந்த நிகழ்வில் விளக்களித்துள்ள கூகுள் நிறுவனம், இத்தகைய மோசடி செய்பவர்களைக் கண்காணிப்பது கடினமாகிவிட்டது. AI மற்றும் MLல் உள்ள அனைத்து அம்சங்களை உபயோகித்து இந்த மோசடியை தடுக்க முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளது.


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மட்டுமே முக்கிய திட்டமாக வைத்திருப்பதாகவும் கூகுள் கூறியுள்ளது. லிங்குகள் தொலைபேசிகளுக்கு வரும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் கூகுள் எச்சரித்துள்ளது. ஆன்லைன் மோசடியில் மக்கள் தங்கள் பேமெண்ட் குறியீடுகளை மோசடி செய்பவர்களுடன் தவறாகப் பகிர்ந்துகொள்வதும், முதன்மையான காரணம் என தெரிவித்துள்ள கூகுள், இதனைப் பயன்படுத்தியும் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருடுகிறார்கள் எனக் கூறியுள்ளது. 


மேலும் படிக்க | Redmi Note 11 SE இந்தியாவில் அறிமுகம், குறைந்த விலையில் கிடைக்கும்


மேலும் படிக்க | Flipkart Sale: ரூ.200-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கேட்ஜெட்டுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ