Flipkart Sale: ரூ.200-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கேட்ஜெட்டுகள்

பிளிப்கார்ட் விற்பனை: புதிய ஸ்மார்ட்போன் அல்லது டிவி மற்றும் ஏசி வாங்க வேண்டுமா, பிளிப்கார்ட்டில் புதிய விற்பனை தொடங்க உள்ளது. 80 சதவீதம் வரை தள்ளுபடியில் பெரும்பாலான பொருட்களை நீங்கள் வாங்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2022, 04:11 PM IST
  • பிளிப்கார்ட்டில் புதிய ஆஃபர்
  • ரூ.200 -க்கும் குறைவான விலையில்
  • கேட்ஜெட்டுகளை அள்ளிச் செல்லுங்கள்
Flipkart Sale: ரூ.200-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கேட்ஜெட்டுகள் title=

பிளிப்கார்ட் புதிய விற்பனையை அறிவித்துள்ளது. இ-காமர்ஸ் தளத்தின் Big Bachat Dhamal விற்பனைவ ஆகஸ்ட் 26 முதல் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் இந்த ஆஃபரில் இதில் பல்வேறு கேட்ஜெட்டுகளுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Flipkart -ன் இந்த விற்பனையில், நீங்கள் மிக குறைவான விலையில் பெரும்பாலான பொருட்களை வாங்க முடியும். 

சிறப்பு சலுகைகள் என்ன?

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இந்த விற்பனையில் சலுகை விலையில் நீங்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு பிரத்யேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிராண்டுகளுக்கு ஏற்றார்போல் ஆஃபர் மற்றும் கூடுதல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

எலக்ட்ரானிக்ஸ் மீது பம்பர் தள்ளுபடி

பிளிப்கார்ட்டின் இந்த தள்ளுபடியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தேவையான உதிரி பாகங்களை நீங்கள் வாங்கலாம். இவற்றுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஃபிட்னஸ் பேண்டுகள், கேமராக்கள் முதல் போன் கவர்கள் வரை மலிவான விலையில் நீங்கள் வாங்க முடியும். பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய ஆஃபர் விற்பனையில், ரூ.799 ஆரம்ப விலையில் வயர்லெஸ் இயர்பட்களைப் பெறுவீர்கள். 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் மொபைல் ஆக்சஸெரீகளையும் வாங்க முடியும். மொபைல் சார்ஜிங் அடாப்டர், சார்ஜிங் கேபிள் மற்றும் பிற சிறிய கேஜெட்களைக் கூட இந்த விலையில் நீங்கள் வாங்க முடியும். 150 ரூபாய்க்கும் குறைவான ஆரம்ப விலையில் ப்ளைன் கவர்கள் (மொபைல் கவர்கள்) விற்பனைக்கு இருக்கின்றன.

குறைந்த விலையில் டிவி-ஃப்ரிட்ஜ்

விற்பனையில் மலிவான விலையில் டிவி மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் கிடைக்கும். 299 ரூபாய் முதல் சமையலறை உபகரணங்கள் கிடைக்கும். தொலைக்காட்சிகளை ரூ.7,499 ஆரம்ப விலையில் நீங்கள் வாங்கலாம். குளிர்சாதன பெட்டிகளில் 50% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏசிக்கு 55% வரை தள்ளுபடி கிடைக்கும். 60% தள்ளுபடியில் வாஷிங் மெஷின் வாங்கலாம்.

மேலும் படிக்க | 5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி

மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News