கிரெடிட் கார்டில் பில்லிங் தேதியை மாற்றுவது எப்படி?
பயனர்கள் கிரெடிட் கார்டின் பில்லிங் முறையில் மாற்றங்களை செய்துகொள்ளும் சில அம்சங்களை ஆர்பிஐ வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சில புதிய விதிமுறைகளை அறிவித்தது. விதிமுறைகள் குறித்து வங்கி வெளியிட்ட 26 பக்க டாக்குமென்டின் ஒரு பகுதியாக கார்டு பயனர்கள் அவர்களின் வசதிக்கு தகுந்தாற்போல ஒரு முறை மட்டும் கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியை மாற்றுவதற்கான ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த புதிய விதியானது, ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்த வங்கிகளின் கடன் வட்டி உயர்ந்தது, புதிய விகிதம் இதுதான்
பில்லிங் சுழற்சி என்பது தொடர்ச்சியான பில்களின் இறுதி தேதிகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி ஆகும். பில்லிங் சுழற்சி முடிந்த 15-25 நாட்களுக்கு பிறகு உங்களது பேமெண்ட்டை செலுத்த வேண்டும். உதாரணமாக உங்களின் பில்லிங் சுழற்சி ஏப்ரல் 11, 2022 முதல் மே 10,2022 வரையெனில் நீங்கள் பேமெண்ட்டை செலுத்த வேண்டிய தேதி ஜூன் 4-5, 2022 அல்லது அதற்கு முந்தைய தேதியாகும். பில்லிங் சுழற்சியின் ஆரம்பம் மற்றும் இறுதி வரை கார்டு பயனர்கள் செய்யும் டிரான்ஸாக்ஷன்களுக்கு எவ்வித வட்டியும் கிடையாது. அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
தற்போது ஆர்பிஐ அறிவித்துள்ள சலுகைப்படி, கிரெடிட் கார்டு பயனர்கள் பண வரவுகளை பொறுத்து அவர்களின் வசதிக்கு தகுந்தாற்போல அவர்களுக்கு ஏற்ற நாளில் பணத்தை செலுத்தி பில்லிங்கை சுழற்சியை மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக, ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே பணம் செலுத்த விரும்பினால், அதற்கு ஏற்றது போல உங்களது கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியை வசதிக்கேற்ப மாற்றியமைத்து கொள்ளலாம். ஆர்பிஐ-ன் இந்த புதிய விதியின்படி, பல கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட தேதிகளில் பணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. கிரெடிட் கார்டுகளை வழங்குபவர்கள் வழங்கிய அனைத்து கிரெடிட் கார்டுகளின் பில்லிங் சுழற்சியையும் சரிவர கவனிப்பதில்லை. ஒரே நாளிலோ அல்லது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவோ பணம் செலுத்தும் தேதியை மாற்றியமைக்க விரும்பினால் ஒரு முறை மற்றும் மாற்றிக்கொள்ளும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | RBI அறிவிப்பால் அதிர்ந்துபோன பங்குச்சந்தை: முழி பிதுங்கிய முதலீட்டாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR