விண்டோஸ் 11-ல் அனைவரையும் ஈர்த்த மிகமுக்கியமான ஒன்று ஆண்ட்ராய்டு ஆப்களை பயன்படுத்தும் வசதி.  மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் விண்டோஸில் எவ்வாறு செயல்படும் என்பதை நிரூபித்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக பயனர்கள் அதை பயன்படுத்தும் நேரத்தில் அது தயாராக இல்லை. கடந்த மாதம், மைக்ரோசாப்ட் புதிய அப்டேட்டில் ஆண்ட்ராய்டு ஆப்களை பிப்ரவரி முதல் பயன்படுத்த முடியும் என்று கூறியது.  தற்போது இந்த வசதி பயன்பாட்டில் வந்துள்ளது.  விண்டோஸ் 11-ல் அமேசான் ஆப்ஸ்டோர் மூலம் ஆண்ட்ராய்டு ஆப்களை பதிவிறக்கி பயன்படுத்த முடியும், இருப்பினும் இது இன்னும் முன்னோட்டத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரபலங்கள் பயன்படுத்தும் Dating App! ஒரு லட்சம் பேர் காத்திருப்பு



விண்டோஸ்11-ல் அமேசான் ஆப்ஸ்டோரிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட ஆப்கள் மற்றும் கேம்கள் இப்போது கிடைக்கும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. டெஸ்டிங் காலத்தில் விண்டோஸ்11ல் இருந்ததை விட இப்போது கூடுதல் வேகத்துடன் செயல்படும் என்று கூறியுள்ளது.  உபர், டிக்டாக் ஆப் மற்றும் சப்வே சர்ஃபர்ஸ் போன்ற கேம்களையும் இப்போது பதிவிறக்கம் செய்ய முடியும்.  ஆனால் உங்கள் பிசி அவற்றை ஆதரிக்குமா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 8 ஜிபி ரேம், ஒரு எஸ்எஸ்டி போன்றவை உங்கள் கணினியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.   



ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் விண்டோஸ்க்கு புதிது அல்ல, இதற்கு முன்பே BlueStack மூலம் பயனர்கள் பயன்படுத்தி உள்ளனர்.  ஆனால் விண்டோஸ் 11-ல் எந்தவித மற்ற ஆப்களின் தேவை இன்றி நேரடியாக பயன்படுத்த முடியும்.  அதாவது விண்டோஸ் 11 ஆனது விண்டோஸ் பயன்பாடுகளைப் போலவே ஆண்ட்ராய்டு ஆப்களையும் பயன்படுத்த முடியும்.   


விண்டோஸின் பிப்ரவரி மாத புதிய அப்டேட்டில் வரும் மிகப்பெரிய விஷயம் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் என்றாலும், பிற அம்சங்களும் உள்ளன. டாஸ்க்பார் இப்போது உங்கள் கணினியில் வானிலைத் தகவலையும், வெளிப்புற மானிட்டர்களில் கடிகாரத் தகவலையும் காட்டுகிறது, டாஸ்க்பார் இப்போது மியூட்/மியூட் பட்டன் மற்றும் டீம்ஸ் கால்களுக்கான ஷேர் திஸ் விண்டோ ஆப்ஷன், க்ரூவ் மியூசிக்கை மாற்றும் மீடியா பிளேயர் மற்றும் புதிதாக- வடிவமைக்கப்பட்ட நோட்ஸ் போன்ற பயன்பாடுகளையும் தருகிறது.


மேலும் படிக்க | 54 சீன செயலிகள் தடை, எந்தெந்த செயலிகள் இதில் அடங்கும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR