வாட்ஸ்அப் இறுதியாக மெசேஜ்களுக்கு எமோஜிக்கள் மூலம் பதிலளிக்கும் அம்சத்தைப் பயனர்களுக்கு கொடுத்து இருக்கிறது.  இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் இனிமேல் மெசேஜ்களுக்கு பதில் மெசேஜ் அனுப்ப வேண்டியதில்லை, எமோஜிகல் மூலமே பதிலளித்து கொள்ள முடியும்.  இந்த அம்சம் குறித்து பேஸ்புக் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.  இதுபோன்று எமோஜிக்கள் மூலம் மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் வசதியானது இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் ஐமெசேஜ் போன்ற பிரபலமான தகவல் தொடர்பு தளங்களில் ஏற்கனவே காணப்படுகிறது.  இந்நிலையில் தற்போது இந்த அம்சத்தை வாட்ஸ்அப் பயனர்களும் பயன்படுத்த போகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இணையத்தில் வெளியான RRR மற்றும் கேஜிஎப்-2: அதிர்ச்சியில் பட குழு


வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சத்தில், நாம் பதிலளிக்க 6 எமோஜிகள் கொடுக்கப்பட்டு இருக்கும், அதில் எந்த எமோஜியை நாம் அனுப்ப விரும்புகிறோமோ அதனை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.  தற்போது இந்த 6 வகையான எமோஜிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன, காலப்போக்கில் கூடுதலாக சில எமோஜிகளை பெற வாய்ப்புள்ளது.  மேலும் இப்போதைக்கு இந்த 6 எமோஜிகளில் மாற்றங்கள் எதுவும் செய்யமுடியாது என்று மார்க் ஜுக்கர்பெர்க்  தெரிவித்துள்ளார்.  மேலும் வாட்ஸ் அப் வழங்கியுள்ள  இந்த ஆறு எமோஜிகளில் லைக், காதல், ஆச்சரியம், சிரிப்பு, சோகம் மற்றும் நன்றி ஆகியவை உள்ளது.


இவ்வாறு மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் பதிலளிப்பது பயனர்களுக்கு மிகவும் எளிமையானதாக உள்ளது.  இந்த அம்சமானது மற்ற ஊடகங்களில் எப்படி வேலை செய்கிறதோ அதுபோன்று தான் இதிலும் வேலை செய்கிறது.  இதனை செய்ய பயனர்கள் மெசேஜ் செய்யும் பகுதிக்கு சென்று ஒரு பதிலளிக்க விரும்பும் மெசேஜை தேர்வு செய்து அதனை நீண்ட நேரம் அழுத்த வேண்டும், அப்போது அதில் இந்த ஆறு விதமான எமோஜிக்கள் தோன்றும் அதில் நமக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து நாம் பதிலளித்து கொள்ளலாம்.  மெசேஜ்கள் மட்டுமல்லாது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற அனைத்திற்கும் எமோஜிகள் மூலம் நாம் பதிலளிக்கலாம்.



வெளியான சில தகவல்களின் படி, வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மற்றும் GIF மூலம் மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் அம்சத்தை வழங்கவிருக்கிறது.  இந்த அம்சம் தற்போது சோதனையில் இருந்து வருகிறது, கூடிய விரைவில் இந்த மாசம் நிலையான வெர்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.  மேலும் வெளியான சில செய்திகளின்படி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜிக்கள் மூலம் பதிலளிக்கும் அம்சத்தை வழங்க சோதனை நடத்தி வருகிறது.  இந்த அம்சமானது தற்போது பீட்டா வெர்ஷனில் பயன்பாட்டில் உள்ளது, இன்ஸ்டாகிராமில் உள்ளதைப் போலவே, ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.  டெஸ்க்டாப்பில் 8 விதமான எமோஜிகள் இருப்பதாக கூறப்படுகிறது, அதே சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகியவற்றில் எத்தனை ஆப்ஷன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.


மேலும் படிக்க | விஜய் வந்தால் மட்டும் போதும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR