விஜய் வந்தால் மட்டும் போதும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்!

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் மாதம் ஒரு முறை எங்களை வந்து பார்த்தால் போதும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2022, 03:42 PM IST
  • விஜய்க்கு எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
  • நான் பேசுவது எதற்கும் விஜய் ரியாக்ட் செய்ய மாட்டார்.
  • விஜய் இப்படி டான்ஸ் ஆடி நான் பார்த்தது இல்லை.
விஜய் வந்தால் மட்டும் போதும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்! title=

விஜய் நடித்த பீஸ்ட் படம் பலவிதமான விமர்சனங்களை பெற்றது.  இருப்பினும், பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றி  பெற்று சாதனை படைத்துள்ளது.  முன்னதாக விஜய்யின் அப்பா சந்திரசேகர் பீஸ்ட் படம் பிடிக்கவில்லை என்று கூறி இருந்தார்.  இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.  நான் பேசுவது எதற்கும் விஜய் ரியாக்ட் செய்ய மாட்டார்,  அவருக்கு பிடிக்கவில்லை என்றால் மட்டுமே அதற்கு கருத்து தெரிவிப்பார், இல்லை என்றால் அமைதியாக இருப்பார் என்று கூறியுள்ளார்.    

Sac, Vijay

மேலும் படிக்க | சினிமாவில் கமல் கணக்கு தப்பாக போகுமா?

கேஜிஎப் படம் பற்றி எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில், கேஜிஎப் 2 படம் இரண்டரை மணி நேரம் சீட்டில் கட்டி போட்டது.  படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளது, இருப்பினும் அவை தனியாக தெரியவில்லை.  கேஜிஎப் 2 படம் எனக்கு மிகவும் பிடித்தது, காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்ததால் லாஜிக் மீறல்கள் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.  பீஸ்ட் படத்தில் உள்ளது போல, என் வாழ்க்கையில் விஜய் இப்படி டான்ஸ் ஆடி பாத்ததே இல்லை, படத்தில் லவ் போர்சன்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. பீஸ்ட் படம் பிடிக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் பீஸ்ட் படம் மிகப்பெரிய கலெக்சன் பெற்றதாக தியேட்டர் அதிபர்கள் கூறி உள்ளனர்.  

விஜய் படத்திற்கு கதை கேட்பது, தயாரிப்பாளர் பிக்ஸ் செய்து என எதிலும் நான் தலையிடுவது இல்லை.  விஜய்யின் ஆடியோ லான்ச் ஸ்பீச் கேட்க ஒரு அப்பாவை தாண்டி ரசிகனாக காத்து கொண்டிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.  விஜய் மனைவி சங்கீதா விஜய்யின் பிசினஸில் தலையிட மாட்டார், முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே கவனித்து கொள்வார்.  சங்கீதாவின் உலகம் அவரது குழந்தைகள் மட்டுமே, சங்கீதா மிகவும் பொறுப்பான பெண். நான் என் பேரன்களிடம் அவ்வளவு நெருக்கம் இல்லை,  போனில் மட்டுமே அவர்களுடன் பேசுகிறேன். 

vijay

விஜய்யின் நல்ல விஷயங்களை நான் எப்போதும் பாராட்ட மாட்டேன், நான் செய்வது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றால் விஜய் அவரது அம்மாவிடம் கூறுவார்.  எனக்கு இருக்கும் பெரிய ஆசை, விஜய் மாதம் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு அரை மணி நேரம் எங்களுடன் பேசினால் போதும்.  இது நடந்தால் நான் மிகவும் சந்தோச படுவேன்.  மேலும் அவர் பேசுகையில், ரசிகன் படத்திற்காக அந்த சமயத்தில் நிறைய திட்டு எனக்கு வந்தது, விஜய்யும் எனது மனைவியும் ஒரே மாதிரி தான் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.

மேலும் படிக்க | 'ஏகே61' படத்தில் இணையப்போகும் 'அசுரன்' பட பிரபலம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News