இணையத்தில் வெளியான RRR மற்றும் கேஜிஎப்-2: அதிர்ச்சியில் பட குழு

RRR மற்றும் கேஜிஎப்-2 படங்கள் இணையத்தில் வெளியானதால் இரண்டு படக்குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2022, 03:57 PM IST
  • இணையத்தில் வெளியானது RRR மற்றும் கேஜிஎப்-2.
  • இதனால் படக்குழு அதிர்ச்சி.
  • இரண்டு படங்களும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இணையத்தில் வெளியான RRR மற்றும் கேஜிஎப்-2: அதிர்ச்சியில் பட குழு title=

தற்போது தமிழ் ரசிகர்களிடையே தமிழ் மொழி படங்களைவிட மாற்று மொழி படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.  அந்த வகையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வசூலை வாரி குவித்த இரண்டு படங்கள் என்றால் அது RRR மற்றும் கேஜிஎப்-2 ஆகும்.  எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி பல திரையரங்குகளில் வெளியான RRR படம் ரசிகர்களின் கவன ஈர்ப்பை பெற்று வெற்றியடைந்தது.  அதைப்போலவே பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான மற்றொரு மாற்று மொழிப்படமான கேஜிஎப்-2 படமும் அதிக வரவேற்பை பெற்று, வசூல் சாதனையும் படைத்தது.  இந்த இரண்டு படக்குழுவும் தங்களது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கொண்டாடடி வரும் நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

RRR poster

மேலும் படிக்க | 'ஏகே61' படத்தில் இணையப்போகும் 'அசுரன்' பட பிரபலம்?

அந்த அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியான இந்த RRR மற்றும் கேஜிஎப்-2 படங்களின் ஹெச்டி பிரிண்ட் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.  இந்த செய்தி இரண்டு படங்களின் படக்குழுவினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து இது வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது, இருப்பினும் இதனை யார் செய்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.  திரையரங்குகளில் வெளியாகும் படங்களை திருட்டுத்தனமாக பார்ப்பது குற்றமாக கருதப்படுகிறது, அப்படி இருக்கையில் இதுபோன்ற பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.  அதிகமாக செலவு செய்து, கடின உழைப்பையும் தந்து ஒரு படத்தை வெளியிடுகின்றனர், ஆனால் சிலர் இதுபோன்ற குற்ற செயல்களை செய்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றனர்.

RRR படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரக்கனி, ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் ஒலிவியா மோரிஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  கேஜிஎஃப்-2 படத்தில் யாஷ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஈஸ்வரி ராவ், ரவீனா, சஞ்சய் தத் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இன்னும் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த சம்பவம் பல திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  இணையத்தில் இந்த படங்கள் வெளியானதால் மிக விரைவில் ஓடிடியில் இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க | பீஸ்ட் படமும் கூர்கா படமும் ஒன்றா? கொந்தளித்த இயக்குனர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News