4 ஜிபி மெமரி கார்டில் 128 ஜிபி சேமிப்பது எப்படி? ஸ்மார்ட்போன் டிரிக்ஸ்
4ஜிபி மெமரி கார்டில் 128 ஜிபி வரை சேமிப்பதற்கு ஒரு எளிமையான டிரிக்ஸ் உண்டு
ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் என்பது இன்று பலருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. அவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், இனி அந்த ஸ்டோரேஜ் பிரச்சனையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த டிரிக்ஸை ஃபாலோ செய்தால் உங்களின் மெமரி கார்டின் ஸ்டோரேஜ் திறனை அதிகரிக்கலாம்.
எப்போதெல்லாம் ஸ்மார்ட்போனின் நினைவகம் நிரம்பத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் போன் ஸ்லோ ஆகிவிடும். இந்தச் சிக்கலைத் தீர்க்க, உங்கள் ஃபோனிலிருந்து பழைய புகைப்படங்கள் மற்றும் பிற மீடியா பைல்களை நீக்க வேண்டும். கிட்டத்தட்ட இந்த டிப்ஸ் தான் பெரும்பாலானோரால் வழங்கப்படுகிறது. ஆனால், நீங்கள் எந்த ஃபைலையும் டெலிட் செய்யாமல், 4 ஜிபி மெமரி கார்டில் 128 ஜிபி பைல்களை சேமிக்கலாம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! உங்கள் பேஸ்புக், கூகுள் கணக்குகள் ஹேக் செய்யப்படலாம்; தவிர்ப்பது எப்படி!
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மெமரி கார்டின் ஸ்டோரேஜ் அதிகரிக்க வேண்டுமானால் ஸ்மார்ட்போனில் ES Explorer செயலியைப் டவுன்லோடு செய்ய வேண்டும். செயலியை டவுன்லோடு செய்த பிறகு பைல்மேனேஜர் ஆப்சனை திறந்து ஸ்டோரேஜூக்கு செல்ல வேண்டும். அதில் சேமிப்பு ஆப்சனில் மெமரி கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது உங்கள் திரையில் சில கோப்புகள் காண்பிக்கும். அதில் ஆன்டிராய்டு டேட்டா சேமிப்பு என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன்பின்னர் அந்த கோப்புக்கு எக்ஸ்பாண்டு என பெயரிடவேண்டும். அப்போது, அந்த கோப்புக்குள் செல்லும்போது 'ES Not Edit Or' என்ற போல்டர் இருக்கும்,. அனை நீங்கள் கிளிக் செய்தால் எந்த பைல்களும் இல்லாத ஒரு போல்டர் இருக்கும். அங்கு, எடிட் ஆப்சனை கிளிக் செய்து Make it Large' என எழுத வேண்டும். இந்த வழிமுறைகளை முடித்தபிறகு உங்கள் ஸ்மார்ட்போனை ஆப் செய்து ஆன் செய்தீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் 124.97 ஜிபியாக மாறியிருப்பதை கவனிக்க முடியும்.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் ஹேங்க் பிரச்சனையா? இதனை செய்யுங்கள்
இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்யும்போது ஸ்மார்ட்போனில் பேட்டரி 100 விழுக்காடு இருக்க வேண்டும். போனின் ஸ்டோரேஜ் காலியாக இருப்பதுடன், ஸ்மார்ட்போன் பதிப்பு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஈஸியாக அதிகரித்துவிடும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR