Hero Mavrick 440: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் நீண்ட நாள்களாக ரிலீஸிற்கு காத்திருந்த பைக் என்றால் ஹீரோ மேவ்ரிக் 440 மாடல்தான். ஒருவழியாக, ஹீரோ மேவ்ரிக் 440 பைக் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக சந்தையில் இந்த மாடல் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Hero World 2024 நிகழ்வில் இந்த பைக் காட்சியப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் அதன் விலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 440cc எஞ்சின் உடன் வருகிறது. இதில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், பைக்கின் கவசம் உலோகத்தால் உருவாக்கப்பட்டது, முழு எல்இடி லைட் அமைப்பு என பல லேட்டஸ்ட் அமைப்புகளுடன் வருகிறது. 


மூன்று வெரியண்ட்


இந்தியாவில் ஹீரோ மேவ்ரிக் 440 பைக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. குறிப்பாக, ஹீரோ மேவ்ரிக் 440 பைக் அடிப்படை மாடல் (Base), நடுத்தர மாடல் (Mid) மற்றும் உயர் ரக மாடல் (Top Variant) வேரியண்ட்களில் கிடைக்கிறது, அதன் விலை ரூ.1.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.



மேலும் படிக்க | அமேசான் பிரைம் பயனர்கள் கவனத்திற்கு! இனி இதற்கும் தனி கட்டணம்!


Hero Mavrick 440: விலை என்ன?


இந்த பைக்கை நீங்கள் வாங்க நினைத்தால், ஹீரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 5 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறத்தக்க டெபாசிட் கொடுத்து முன்பதிவு செய்யலாம். குறிப்பாக, மார்ச் 15ஆம் தேதிக்கு முன் இந்த பைக்கை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கையுறை போன்ற பைக் கிட் இலவசமாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப். 15ஆம் தேதி முதல் பைக் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பைக்கின் விலை, அடிப்படை வேரியண்ட் மாடல் வெள்ளை நிறத்தில் வருகிறது. அதன் விலை 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆகும். சிவப்பு மற்றும் நீல நிறத்தில் நடுத்தர வேரியண்ட் மாடல் வருகிறது, அதன் விலை 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ஆகும். கருப்பு நிறத்தில் வரும் டாப் வேரியண்டின் விலை 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஆகும். 


Hero Mavrick 440: இஞ்சின் எப்படி?


இந்த பைக்கில் 440cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. 6,000RMP-இல் 27php பவரையும், 4000RPM-இல் 36Nm டார்க் திறனையும் வழங்கும். என தெரிவிக்கப்படுகிறது. ஆறு கியர் பாக்ஸ் உடன் வருகிறது. 


Hero Mavrick 440: என்னென்ன மாடலுக்கு போட்டி?


2 லட்சம் ரூபாயில் சந்தையில் கிடைக்கும் பைக்குகளின் வகைமைகளில் இந்த பைக் கடுமையான போட்டியை அளிக்கும். இது ஜாவா 350, ஹோண்டா CB350, ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஆகியவைக்கு கடும் போட்டியாக இருக்கும். இதில் ஹோண்டா CB350 2 லட்ச ருபாயில் இருந்து தொடங்குகிறது. ஜாவா 350 2.15 லட்ச ருபாயில் இருந்து தொடங்குகிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் 1.74 லட்ச ரூபாயில் தொடங்குகிறது.


மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கேன்சல் செய்த பிறகு கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ