2024 ஜனவரியில் இத்தனை லட்சம் பைக்குகள் விற்பனையா... எந்த நிறுவனம் டாப்?

Two Wheeler Sales In January 2024: நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் எவ்வளவு இருச்சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன, எந்தெந்த நிறுவனம் எவ்வளவு விற்பனை செய்துள்ளது என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 12, 2024, 09:11 AM IST
  • கடந்தாண்டு ஜனவரி மாதத்தை விட இந்தாண்டு ஜனவரயில் பைக் விற்பனை அதிகமாகி உள்ளது.
  • குறிப்பாக, கடந்த டிசம்பரை விடவும் இம்மாதம் பைக் விற்பனை அதிகம்.
  • 14,16,096 இரு சக்கர வாகனம் கடந்த ஜனவரியில் விற்பனையாகி உள்ளது.
2024 ஜனவரியில் இத்தனை லட்சம் பைக்குகள் விற்பனையா... எந்த நிறுவனம் டாப்? title=

Two Wheeler Sales In January 2024: ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு மாதமும் கார், பைக் போன்ற வாகனங்களின் விற்பனைகள் அதிகரித்துகொண்டே தான் வருகின்றன. பொருளாதார பிரச்னைகள் நிலவும் காலகட்டங்களில் மட்டுமே இதன் விற்பனையில் வீழ்ச்சியை காண முடியும் எனலாம். இருப்பினும், கார் மற்றும் பைக் ஆகியவற்றின் விற்பனை உயர்வுக்கும், பொதுமக்களின் வாழ்வாதார உயர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். 

கார் சற்று ஆடம்பரமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதன் விலை அதிகம் என்பதாலும் பலராலும் வாங்க முடியாது. அந்த நிலையில், பலரும் பைக்கை நோக்கி நகர்கின்றனர் எனலாம். EV ஸ்கூட்டர், ஸ்கூட்டர், பைக் என பல்வேறு இரு சக்கர வாகன வகைமைகள் இருந்தாலும், அதன் மீதான மோகத்தில் குறைவில்லை. 

மொத்த விற்பனை எவ்வளவு?

அந்த வகையில், 2024ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் விற்பனையான இரு சக்கர வாகனங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் எந்தெந்த மாடல்கள் எவ்வளவு விற்பனையாகி உள்ளது என்ற விவரம் இல்லை. ஆனால், நிறுவனங்கள் எவ்வளவு யூனிட் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

அதில், ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ், சுசுகி, என்ஃபீல்ட் என ஆறு நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக, இந்தாண்டு மொத்தம் 14 லட்சத்து, 16 ஆயிரத்து, 96 இரு சக்கர வாகனம் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு 11 லட்த்து, 20, 330 பைக்குகள் விற்பனையாகின. இதன்மூலம், சுமார் 2,95, 766 வாகன யூனிட்கள் விற்பனை உயர்ந்துள்ளது. அவை குறித்து இங்கு காணலாம். 

மேலும் படிக்க | யமஹா களமிறக்கும் அதிரடி பைக்குகள்... அலறப்போகும் இந்திய சந்தை - முழு விவரம்

ஹீரோ  

ஹீரோ நிறுவனம் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 934 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 20.46% சதவீதம் அதாவது சுமார் 71,497 யூனிட்கள் உயர்ந்துள்ளன. கடந்தாண்டு ஜனவரியில் வெறும் 3,49,437 யூனிட்கள்தான் விற்பனையாகி உள்ளது. குறிப்பாக, கடந்த டிசம்பவர் மாத விற்பனையையும், நடப்பாண்டு ஜனவரியின் விற்பனையையும் ஒப்பிடும்போது, 43,092 யூனிட்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் 3,77,842 யூனிட்களே விற்பனையாகின. ஹீரோ இம்மாத மொத்த இருச்சக்கர வாகன விற்பனையில் 29.72% சதவீதம் பங்களித்து முதலிடத்தில் உள்ளது. 

ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் இந்தாண்டு ஜனவரியில் 3,82,512 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் 2,78,143 யூனிட்களையே விற்பனை செய்திருந்தது. தற்போது அதன் விற்பனை 1,04,369 யூனிட்டுகள் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரை விடவும் 96,111 யூனிட்களை அதிகம் விற்பனை செய்துள்ளது. 2023 டிசம்பரில் 2,86,101 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இம்மாத மொத்த இருச்சக்கர வாகன விற்பனையில் 27.01% சதவீதம் பங்களித்து ஹோண்டா இரண்டாமிடத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | லேப்டாப்பில் அதிக தூசியா? சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!

டிவிஎஸ்

இம்மாத விற்பனையில் டிவிஎஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது, மொத்த விற்பனையில் 18.94% ஆகும். கடந்தாண்டு ஜனவரியில் 2,16,471 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜனவரியில் 2,68,333 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது 51,762 யூனிட்கள் அதிகம் விற்பனையாகும். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 2,14,988 யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது, ஒரே மாதத்தில் 53,245 யூனிட்கள் அதிகமாகி உள்ளன. 

பஜாஜ்

நான்காமிடத்தில் உள்ள பஜாஜ், மொத்த விற்பனையில் 13.65% ஆகும். இந்தாண்டு ஜனவரியில் 1,93,350 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, கடந்தாண்டு 1,42,368 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதாவது கடந்தாண்டை 50,982 யூனிட்கள் அதிமாகி உள்ளது.  கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1,58,370 யூனிட்கள் விற்பனையானது. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, இம்மாதம் 34,980 யூனிட்கள் அதிகம்

சுசுகி

இம்மாதத்தின் மொத்த இருச்சக்கர வாகன விற்பனையில் சுசுகி 5.93 சதவீதம் பங்களித்து, ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்தாண்டு ஜனவரியில் 80,511 யூனிட்களும், கடந்தாண்டு 66,209 யூனிட்களும் விற்பனையாகி உள்ளது. இந்தாண்டு 14,302 யூனிட்கள் அதிகமாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 69,025 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. ஒரு மாதத்தில் சுசுகி 11,486 யூனிட்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. 

ராயல் என்பீஃல்டு 

ஆறாவது இடத்தை பிடிக்கும் ராயல் என்பீல்ஃடு, மொத்த இருச்சக்கர வாகன விற்பனையில் 4.98% பங்களிக்கிறது. இந்தாண்டு ஜனவரியில் 70,556 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன, கடந்தாண்டு 67,702 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இரண்டையும் ஒப்பிட்டால் 2,854 யூனிட்கள் இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் 57,291 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஒரே மாதத்தில் 13, 365 யூனிட்கள் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | வீட்டில் இன்வெர்ட்டர் இருக்கா... வெயில் காலம் வருவதற்கு இதையெல்லாம் செக் பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News