OnePlus Nord 3 Discount In Amazon: ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. OnePlus ஸ்மார்ட்போன் தற்போது Nord சீரிஸ் மொபைல்களும் மிகவும் பிரபலமானவை. தற்போது Nord 4 சீரிஸ் மொபைல் அறிமுகமாக உள்ளது. இந்த மொபைலுக்கும் வாடிக்கையாளர்கள் இடையே கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 24ஆம் தேதி வெளியாக உள்ள OnePlus Nord 4 சீரிஸில் OnePlus Nord CE4 Lite 5G மற்றும் OnePlus Nord 4 மொபைல் ஆகியவை வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது அதன் மற்றொரு மொபைலும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம். 


அமேசானில் தள்ளுபடி


கடந்த ஜூலை மாதம் OnePlus நிறுவனம் Nord 3 மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்தே தற்போது Nord 4 சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், Amazon Monsoon Mobile Mania Sale என்ற விற்பனையில் இந்த மொபைல் சுமார் 13 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கிறது. அதாவது Nord 3 மொபைலின் அசல் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகும். ஆனால், Nord 3 ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப் கான்டெக்டுகளை QR குறியீடு மூலம் பகிரலாம்..! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்


அதாவது நல்ல அம்சங்களை கொண்ட இந்த மொபைல் இந்த விலையில் வேறெங்கும் கிடைக்கவே கிடைக்காது. அதாவது, 20 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் வேறு மொபைல்களில், OnePlus Nord 3 மொபைல்களில் இருக்கும் அம்சங்கள் இருக்காது. குறிப்பாக, OnePlus Nord CE 4 Lite இப்போது அறிமுகமாக உள்ள நிலையில், அதன் விலையும் ரூ.20 ஆயிரத்திற்குள் இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. சொல்லப்போனால் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த 2 மொபைல்களுக்கு இடையேயே தற்போது கடும் போட்டி உள்ளது எனலாம். மேலும், OnePlus Nord CE3 Lite மொபைலின் சிப்செட் குறித்து தகவல் தெரியாததால் இரு மொபைல்களையும் நம்மால் ஒப்பிட முடியாது.


OnePlus Nord 3 vs OnePlus Nord CE 4 Lite


இருப்பினும், OnePlus Nord CE 4 Lite மொபைல் Qualcomm Snapdragon 695 SoC சிப்செட்டில் வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், OnePlus Nord 3 மொபைலில் MediaTek Dimensity 9000 சிப் கிடைக்கிறது. எனவே,  OnePlus Nord 3 மொபைலில் இது கூடுதல் சிறப்பு. இப்போது OnePlus Nord 3 மொபைலின் ஆரம்ப விலை அமேசானில் ரூ.19,998 ஆகும். இதன் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டில் வருகிறது. 


கூடுதல் தள்ளுபடி


மேலும் கூடுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் 10 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் விலை முன்னர் ரூ.33 ஆயிரத்து 999 ஆக இருந்தது. இந்த தள்ளுபடி அமேசானில் ஜூன் 25ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது. OnePlus Nord 3 6.74 இன்ச் AMOLED +FHD டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதன் ரெப்ரேஷ் ரேட் 120Hz ஆகும். 5000mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப் மூலம் பிளைட் டிக்கெட் புக் பண்ணலாம்..! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ