இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் சூப்பர் செயலி ஒன்றை ஒருவாக்கிக் கொண்டிருக்கிறது. ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் ஒரு செயலியில் தீர்க்கக்கூடிய வகையிலான சேவையை கொடுக்கும் புதிய செயலி வடிவமைக்கப்படுகிறது. இந்த சூப்பர் ஆப்பை, ரயில்வே அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான CRIS உருவாக்கி வருகிறது. இந்த ஆப்பை உருவாக்குவதற்கான செலவு சுமார் 90 கோடி ரூபாய் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | புத்தாண்டில் டாப் கியர் போடும் டாடா, ஜியோவுக்கு ஆப்பு... ரூ.266-க்கு 23 ஓடிடி சந்தா!


இந்த சூப்பர் ஆப்பில், Rail Madad, UTS மற்றும் தேசிய ரயில் விசாரணை அமைப்பு பயன்பாடுகள் இருக்கும். மேலும், PortRead, Satark, TMS-Nirikshan, IRCTC Rail Connect, IRCTC eCatering Food on Track மற்றும் IRCTC Air போன்றவற்றையும் சூப்பர் ஆப்ஸில் சேர்க்கலாம். இந்த சூப்பர் ஆப், பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். பயனர்கள், ஒரு ஆப்பில் இருந்து அனைத்து ரயில்வே சேவைகளையும் பெற முடியும். இதனால், பயனர்களுக்கு பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும், பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும்.


இந்த சூப்பர் ஆப், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சூப்பர் ஆப்பின் முக்கிய அம்சங்கள்


- டிக்கெட் முன்பதிவு
- ரயில் கண்காணிப்பு
- புகார்பதிவு
- உணவு ஆர்டர் செய்தல்
- ரயில் பயணத்திற்கான தகவல்கள்
- ரயில்வே சேவைகள் தொடர்பான அம்சங்கள்


சூப்பர் ஆப்பின் நன்மைகள்


- ரயில் பயணிகளுக்கு எளிமையான பயணம்
- பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தல்


இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாக கொண்டே ரயில்வே துறை இந்த புதிய செயலியை வடிவமைத்திருக்கிறது. 


மேலும் படிக்க  | iPhone 15: இப்படி ஆஃபர் கொடுத்தா ஐபோன் அதிகம் விற்காமல் இருக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ