புத்தாண்டில் டாப் கியர் போடும் டாடா, ஜியோவுக்கு ஆப்பு... ரூ.266-க்கு 23 ஓடிடி சந்தா!

டாடா பிளே பிஞ்ச் திட்டத்தில் மாதம் ரூ.266 செலுத்தினால் 23 ஓடிடிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த அறிவிப்பு ஜியோ உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 1, 2024, 06:25 PM IST
  • டாடா நிறுவனத்தின் ஓடிடி பிளான்
  • ஜியோ நிறுவனத்துக்கு போட்டி
  • வெறும் 266 ரூபாய்க்கு 23 ஓடிடி சந்தா
புத்தாண்டில் டாப் கியர் போடும் டாடா, ஜியோவுக்கு ஆப்பு... ரூ.266-க்கு  23 ஓடிடி சந்தா!  title=

டாடா பிளே நிறுவனம் அதன் ஓடிடி திட்டங்களின் கீழ் மாதம் ரூ.266-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி, 23 ஓடிடி சந்தா வழங்குகிறது. இந்த திட்டம் டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, எம்எக்ஸ்பிளேயர், பிளேஃபிளிக்ஸ், கிக்க், ஃபேன்கோட், ஸ்டேஜ், சன்நெக்ஸ்ட், ஆஹா, ஹங்கமா பிளே, ஷீமாரூமி, எபிக்ஆன், டாக்குபே, ஷார்ட்ஸ்டிவி, டிராவல்எக்ஸ்பி, பிளானட் மராத்தி, மனோரமா மேக்ஸ், ஐஸ்டீரீம், சாவ்பல், ரீல்டிராமா, நம்மஃபிளிக்ஸ் மற்றும் விஆர் ஓடிடி ஆகிய 23 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

மேலும் படிக்க | டக்குனு போட்டோஸ் டெலீட் ஆகிவிட்டதா... ஈஸியாக மீட்டுக்கலாம் - வழிகள் இதோ!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஒரே நேரத்தில் டிவி, மொபைல், லேப்டாப் உள்ளிட்ட 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்யலாம். அதேபோல தனித்தனியே ஓடிடி ஆப்களை பயன்படுத்த தேவையில்லை. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் டாட்டா பிளே பிஞ்ச் ஆப்பை டவுன்லோட் செய்தால்போதும், அதிலேயே அனைத்து கன்டென்ட்களும் வந்துவிடும்.

டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டத்தின் நன்மைகள்:

மாதம் ரூ.266-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி
23 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன்
ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்தல்
தனித்தனி ஓடிடி ஆப்களை பயன்படுத்த தேவையில்லை

டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டத்தை எப்படி ரீசார்ஜ் செய்வது?

- கூகுள் பிளே ஸ்டோரில் டாட்டா பிளே பிஞ்ச் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
- ஆப்பில் உங்கள் டாட்டா ஐடி அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழையவும்.
- டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யவும்.
- இந்த திட்டம் ஓடிடி ஆர்வலர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்று. குறைந்த செலவில் அதிக ஓடிடி கன்டென்ட்களை பெற விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் படிக்க | பெங்களூருவில் டெஸ்லா கார்... ஆச்சர்யத்தில் உறைந்த நெட்டிசன்கள் - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News