ஐபிஎல் 2023: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி? இங்கே தெரிந்து கொள்வோம்
ஐபிஎல் டிக்கெட்டுகள் வாங்கும் விருப்பங்கள் இருந்தால் ஆன்லைனில் வாங்குவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். விலையைப் பொறுத்த வரை ஃபிரான்சைஸ் மற்றும் போட்டிகள் நடைபெறும் மைதானங்களைப் பொறுத்து டிக்கெட் விலை மாறுபடும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கின் 2023 பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது. தங்களுக்கு பிடித்த அணிகளின் போட்டியைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மைதனாங்களில் போட்டியைக் காண டிக்கெட் கிடைப்பதில்லை. ஒருவேளை உங்களுக்கு ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க விருப்பம் இருந்தால், ஆன்லைனில் ஐபிஎல் டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும். அதனை எப்படி பெறுவது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் 2023-க்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?
டிக்கெட்டின் விலை அணி மற்றும் மைதானத்தைப் பொறுத்து மாறுபடும். ஆரம்ப விலை ரூ. 400-ல் தொடங்கி, பிரீமியம் டிக்கெட்டுக்கு ரூ.2,500 வரை செலுத்த வேண்டியிருக்கும். கிரிக்கெட்டை மைதானத்திற்கு சென்று பார்க்க விரும்பும் ரசிகர்கள், நேரடியாக மைதானத்துக்கு சென்று டிக்கெட் கவுன்டர்களில் இருந்தும் வாங்கலாம், ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ளலாம். பல உரிமையாளர்கள் BookMyShow மற்றும் PayTM இன்சைடரில் டிக்கெட்டுகளை விற்கிறார்கள். மேலும், சிலர் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் டிக்கெட்டுகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | சாட்ஜிபிடி கூட சாட் செய்தால் ரூ.2.50 கோடி சம்பளம்..! டெக் இளைஞர்களே தயாராகுங்கள்
குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவை பேடிஎம் இன்சைடர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை அனுமதிக்கின்றன. இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டிகளுக்கு BookMyShow மூலம் முன்பதிவு செய்யலாம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்களுக்கான டிக்கெட்டுகளை அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவு செய்யலாம். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஆன்லைன் டிக்கெட் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், மைதானங்களில் உணவு மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகளை இணைக்கும் வெவ்வேறு அடுக்கு டிக்கெட்டுகளும் உள்ளன. ஒருவேளை இந்த டிக்கெட் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், மைதானத்தில் நேரடியாக சென்று உணவுப் பொருட்களுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே, மும்பைக்கு பிறகு ஆர்சிபி தான் பெஸ்ட் டீம் - விராட் கோலி ஓபன் டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ