நியூடெல்லி: itel A60 மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பேசியில் வலுவான பேட்டரி மற்றும் சிறந்த கேமரா அமைப்பு உள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு கோ பதிப்பில் வேலை செய்கிறது. இந்த கைபேசியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

tel A60 மொபைல் சிறப்பம்சங்கள்


itel A60 பின் பேனலில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12 Go Edition இல் வேலை செய்கிறது
5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது


itel a60
itel தனது புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, itel A60  நுழைவு நிலை ஸ்மார்ட்போன். 6.6 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ள இந்த கைப்பேசியில் வலுவான வடிவமைப்பு உள்ளது. பின் பேனலில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இந்த கைபேசியில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பின் பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. அதன் விலை, அம்சங்கள் மற்றும் கேமரா அமைப்பு போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


itel a60 விலை


itel A60 விலை 5999 ரூபாய். 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ள இந்த மொபைல் டான் ப்ளூ, வெர்ட் மெந்தே மற்றும் சபையர் பிளாக் என மூன்று வண்ண வகைகளில் வருகிறது. இந்தியாவில், ஆஃப்லைன் கடைகளைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த கைபேசி கிடைக்கும்.


மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?


itel a60 விவரக்குறிப்புகள்
itel A60 மொபைலில் 6.6-இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1612 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது, செல்ஃபி கேமரா அருமையாக உள்ளது. இந்த தொடக்க நிலை ஸ்மார்ட்போனில் 1.4GHz குவாட் கோர் SC9832E செயலி உள்ளது. மேலும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 128ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டை வைக்கலாம்.


itel a60 கேமரா அமைப்பு
itel A60 இன் கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், பின் பேனலில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதில் முதன்மை கேமரா 8 மெகாபிக்சல்கள், இரண்டாவது கேமரா VGA கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 5எம்பி கேமரா உள்ளது. இந்த ஐடெல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 (Go Edition) இல் வேலை செய்கிறது.


இதர வசதிகள்
கைரேகை ஸ்கேனர் பாதுகாப்பு கொண்ட இந்த கைபேசியில் பின் பேனலில் அது பொருத்தப்பட்டுல்ளது.  செல்ஃபி கேமராவுடன் இணைந்து செயல்படும் ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Jackpot! லட்சங்களை அள்ளித் தரும் ‘ஒரு ரூபாய்’ நோட்டு உங்க கிட்டே இருக்கா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ