சியோமி இந்தியா: ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஸ்மார்ட் டிவி பிராண்டான சியோமி இந்தியா வியாழன் அன்று நாட்டில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தொலைபேசி ஆதரவு சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியின் கீழ், சியோமி மூத்த குடிமக்களுக்கு தொலைபேசி அமைவு சேவைகளை வழங்கும். சேவைகளைப் பெற, வாடிக்கையாளர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை நிரப்பி அவர்கள் விரும்பும் சேவையைத் தேர்வு செய்யலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், Xiaomi சேவைப் பிரதிநிதி வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு அவர்களின் பின் குறியீட்டைச் சரிபார்த்து சேவையின் வகை மற்றும் தகுதியைச் சரிபார்ப்பார்.


இந்த செயல்முறை முடிந்ததும், ஒரு சியோமி சேவைப் பிரதிநிதி உடனடியாக அவர்களின் வீட்டுக்கு வருவார். வாடிக்கையாளர்கள் ஹாட்லைன் எண் 1800-103-6286 மற்றும் வாட்ஸ்அப் எண் - 8861826286 ஆகியவற்றிலும் டோக்கனைப் பெறலாம்.


மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடியே சேவைகளைப் பெறுவார்கள்


சியோமி இந்தியாவின் தலைவர் முரளிகிருஷ்ணன் பி கூறுகையில், " சியோமி இந்தியாவில் (Xiaomi India), எங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். பல்வேறு காரணங்களால் சேவை மையத்திற்குச் செல்ல முடியாத குடிமக்களுக்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. " என்றார். 


மேலும் படிக்க | Maruti WagonR Vs Celerio: உங்களுக்கு ஏற்ற சிறந்த கார் எது? ஒப்பீடு இதோ


முரளிகிருஷ்ணன் மேலும் கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டிலேயே இலவச சேவையை வழங்குவதன் மூலம், எங்கள் பயனர்களை எங்கள் குழுக்களுடன் சிறப்பாக ஈடுபட ஊக்குவித்து, தடையற்ற சேவை அனுபவத்தை வழங்க நாங்கள் விரும்புகிறோம். வரும் ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் பரந்த நெட்வொர்க்கை பெற, எங்கள் சேவைகளை இலகுவாக மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். ." என்றார்.


ரூ.249 வசூலிக்கப்படும்


இந்தச் சலுகை அவர்களின் அருகிலுள்ள சேவை மையத்திலிருந்து 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். அறிமுக சலுகையாக மூத்த குடிமக்களுக்கு 30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும். மற்ற வாடிக்கையாளர்களும் சேவைகளைப் பெறலாம். ஆனால் பெயரளவு கட்டணமாக ரூபாய் 249 மற்றும் வரிகளை செலுத்த வேண்டும்.


இந்த நகரங்களில் சேவை கிடைக்கும்


முதற்கட்டமாக, அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நொய்டா, புனே உள்ளிட்ட 15 நகரங்களில் இந்தச் சேவை நேரலையில் இருக்கும். ஆன்-டோர் ஃபோன் சப்போர்ட் சர்வீஸ் கேம்-சேஞ்சர் என்பதை நிரூபிக்கும் என்றும் வாடிக்கையாளர் சேவையில் புதிய அளவுகோலை இது அமைக்கும் என்றும் தாங்கள் நம்புவதாக நிறுவனம் கூறியது.


மேலும் படிக்க | ஹாட்ஸ்டார் - அமேசான் ஓடிடி இலவசமாக கொடுக்கும் ஏர்டெல்லின் 5 சூப்பர் பிளான்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ