பிளிப்கார்டில் செம ஆஃபர்..! வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6ஏ மொபைல்

Flipkart offer: பிளிப்கார்டில் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனை ரூ.28 ஆயிரத்தில் வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட அனைத்து ஆஃபர்களும் கிடைத்தால் வெறும் 300 ரூபாய்க்கு மொபைலை எடுத்துச் செல்லலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 20, 2023, 07:57 AM IST
பிளிப்கார்டில் செம ஆஃபர்..! வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6ஏ மொபைல்  title=

பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் ஆஃபர்

கூகுளின் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு இப்போது  மிகப்பெரிய  தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 7ஏ விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு ரூ.16,000 வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கில் வேரியண்டில் வெளியிடப்பட்ட கூகுள் பிக்சல் 6ஏ, 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியுடன் ரூ.43,999-க்கு விற்பனையாகிறது. வழக்கமான நாட்களில் மட்டுமே இந்த விலை. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஃபரில் ரூ.28,999 விலையில் பிளிப்கார்டில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | Cheap and Best Laptops: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் அசத்தல் லேப்டாப்கள்

கூகுள் பிக்சல் 6A தள்ளுபடி 

அதாவது கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை அதன் வெளியீட்டு விலையை விட ரூ.15,000 குறைவாக வாங்கலாம். பல வங்கிச் சலுகைகளும் Flipkart கூகுள் பிக்சல் 6 மொபைலுக்கு அறிவித்துள்ளது. SBI கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். HDFC வங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகளுடன், கூகுள் பிக்சல் 6A வெறும் ரூ.27,999க்கு கிடைக்கிறது. Flipkart Axis Bank கார்டு மூலம் வாங்கினால், 5 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். EMI சலுகை ரூ.9,667 முதல் தொடங்குகிறது. 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. பழைய மொபைலுக்கு ரூ. 27,250 வரை ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. ஒருவேளை உங்கள் பழைய ஸ்மார்ட்போன் இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு எக்ஸ்சேஞ்ச் காஷ்பேக் ஆஃபரை முழுமையாக நீங்கள் பெற்றால், வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6 மொபைலை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

கூகுள் பிக்சல் 6A சிறப்பம்சம்

கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போன் (Specs)  60Hz அப்டேட்டுடன்  6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கண்ணாடி வடிவமைப்புடன் வருகிறது. கூகுளின் சொந்த டென்சர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 மெகாபிக்சல் பிரதான கேமரா + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராக்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 8 மெகாபிக்சல் ப்ரண்ட் கேமரா உள்ளது. 4306 mAh பேட்டரி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 OS உடன் வேலை செய்கிறது. Android 13 அப்டேட் விரைவில் வரும். செயலிகளை பொறுத்தவரை கூகுள் ஆப்ஸ் தவிர வேறு எந்த செயலிகளும் இதில் இல்லை.

மேலும் படிக்க | Lava Blaze 2: ரூ. 10,000 -க்கும் குறைவான விலை, விற்பனை ஆரம்பம், முந்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News