ஹாட்ஸ்டார் - அமேசான் ஓடிடி இலவசமாக கொடுக்கும் ஏர்டெல்லின் 5 சூப்பர் பிளான்கள்

ஓடிடி பிளாட்பார்ம்களை தனியாக ரீச்சார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் ரீர்ஜூடன் ஹாட்ஸ்டார், அமேசான் ஓடிடி தளங்களை இலவசமாக பெறலாம். இதற்கான 5 சூப்பர் ரீச்சார்ஜ் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 20, 2023, 11:58 AM IST
ஹாட்ஸ்டார்  - அமேசான் ஓடிடி இலவசமாக கொடுக்கும் ஏர்டெல்லின் 5 சூப்பர் பிளான்கள் title=

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்து, திரைப்படங்கள் பார்ப்பதில் விருப்பமுள்ளவராக இருந்தால் ஏர்டெல்லின் ரீச்சார்ஜ் திட்டங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் ஏர்டெல் நிறுவனம் தங்களுடைய ரீச்சார்ஜ் பிளானில் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களை இலவசமாக கொடுக்கிறது. இதற்கு முன்பு பல ப்ரீப்பெய்ட் திட்டங்களில் ஹாட்ஸ்டாரை கொடுத்து வந்த நிலையில், அவை குறைக்கப்பட்டு சில பிளான்களில் மட்டுமே இப்போது ஹாட்ஸ்டார் - அமேசான் பிரைம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதனால், அவை எந்தெந்த திட்டங்கள் என்பதை நீங்கள் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். 

ஏர்டெல் ஹாட்ஸ்டார் பிளான்கள் 

ரூ.499, ரூ.839 மற்றும் ரூ.3359 ஆகிய ப்ரீப்பெய்ட் ஏர்டெல் திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தாவை கொடுக்கின்றன. இந்த திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறலாம். ரூ.3359 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2.5ஜிபி டேட்டாவும், ரூ.839 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவும், ரூ.499 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | பிளிப்கார்டில் செம ஆஃபர்..! வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6ஏ மொபைல்

ரூ.499 திட்டம் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ரூ.839 மற்றும் ரூ.3359 திட்டங்கள் முறையே 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.3359 உடன், பயனர்கள் ஒரு வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தாவை பெறுகிறார்கள். அத்துடன் வரம்பற்ற 5G டேட்டா, Apollo 24|7 Circle, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music. ரூ.839 மற்றும் ரூ.499 திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுடன் 3 மாதங்களுக்கு வருகின்றன.

ஏர்டெல்லின் Amazon Prime பிளான்கள்

ஏர்டெல் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் வழங்குகிறது. இந்த திட்டங்களின் விலை ரூ.699 மற்றும் ரூ.999 ஆகும். மேலும், அவை 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும். இரண்டு திட்டங்களும் அன்லிமிட்டெட் குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகின்றன. ரூ.699 திட்டத்தில், பயனர்கள் 56 நாட்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மற்றும் 3ஜிபி தினசரி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.999 திட்டத்தில், பயனர்கள் 2.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் 84 நாட்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு திட்டங்களிலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான சந்தா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் பல நன்மைகள் உள்ளன.

மேலும் படிக்க | Cheap and Best Laptops: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் அசத்தல் லேப்டாப்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News