Best Offers For Side By Side Fridge In Amazon: கோடை சீசன் என்றாலே பல விஷயங்களுக்கு அதிக தேவைகள் இருக்கும். மாம்பழம், தர்பூசணி, கிரீனிப்பழம், பலாப்பழம் ஆகிய பழங்கள் இந்த சீசனில்தான் கிடைக்கும் என்பதால் இதன் டிமாண்டும் அதிகமாக இருக்கும். அதேபோல், வீட்டு உபயோக பொருள்கள் என்றால் ஏசி, ஏர் கூலர், பேன், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களுக்கும் இந்த சீசனில் நல்ல டிமாண்ட் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா போன்ற வெயில் அதிகம் இருக்கும் நாட்டில் பேன், ஏசி ஆகியவை நடுத்தர மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. வீட்டில் குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால் இந்த கடும் வெயிலை அவர்களால் தாக்குபிடிக்க இயலாது. எனவே, பலரும் கோடை காலத்தில்தான் இந்த பொருள்களை வாங்க நினைப்பார்கள். குளிர் காலத்தில் யாருக்கும் ஏசி, பிரிட்ஜ் தேவைப்படாது என்பதால் கோடை காலம் வரை சிறுக சிறுக சேமித்து இந்த பொருள்களை வாங்க நினைப்பார்கள். 


சைட்-பை-சைட் பிரிட்ஜ்


அந்த வகையில், இந்த கோடை காலத்தில் ஏசி, பிரிட்ஜ் மட்டுமின்றி பல்வேறு பொருள்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகின்றன. குறிப்பாக, அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களும் பல  பொருள்களுக்கு தள்ளுபடியை வழங்கி வருகின்றன. அதிலும் அமேசான் நிறுவனம் தற்போதைய சம்மர் சேலில் பிரிட்ஜுக்கு கடும் தள்ளுபடியை வழங்கியிருக்கிறது. சைட்-பை-சைட் பிரிட்ஜ்கள் வீட்டு உபோயக்கத்திற்கு சிறந்தது என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க |  ரயில் டிக்கெட்டுகளை ஈஸியாக புக் செய்ய இந்த 3 செயலிகளை பயன்படுத்துங்கள்!


இந்த பிரிட்ஜ்கள் சாதராண நாள்களில் இதன் வில லட்சக்கணக்கில் இருக்கும். ஆனால் தற்போதைய அமேசான் விற்பனையில் பெரிய தள்ளுபடிகள் இந்த பிரிட்ஜிற்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், விற்பனையில் சிறந்து விளங்கும் மூன்று பிரிட்ஜ்களையும், அதன் அசல் விலை மற்றும் தள்ளுபடியில் கிடைக்கும் விலை ஆகியவற்றை இங்கு காணலாம். 


Samsung 653 L


சாம்சங்கின் இந்த பிரிட்ஜில் டபுள் டோர் உள்ளது. இதில் கன்வெர்டிபிள் 5-இன்-1 டிஜிட்டல் இன்வெட்டர் உள்ளது. மேலும் வைஃபை கொண்ட ஏஐ உடன் வரும் பிரிட்ஜ் ஆகும். இந்த பிரிட்ஜின் விலை 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது இதில் 29 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது, 79 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ பேங்க் கார்டு மூலம் நீங்கள் இதனை வாங்கினால் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும். இதன் கொள்ளளவு 653 லிட்டர் ஆகும்.


Haier 596 L


இந்த பிரிட்ஜின் கொள்ளளவு 596 லிட்டராகும். இந்த சைட்-பை-சைட் பிரிட்ஜின் விலை 1,01,000 ரூபாய் ஆகும். தற்போது 41 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் விலை தற்போது 59 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். மேலும், இதில் 1,500 ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கார்டில் இதை வாங்கினால் 7 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். 


LG 655 L


இந்த சைட்-பை-சைட் பிரிட்ஜின் விலை 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 ரூபாய் ஆகும். இந்த பிரிட்ஜிற்கு 42 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் விலை தற்போது 69 ஆயிரத்து 990 ரூபாயாகும். மேலும், 3000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்டுக்கு 5000 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. இந்த பிரிட்ஜின் கொள்ளளவு 655 லிட்டராகும். 


மேலும் படிக்க | ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ