ஒரே முறை ரீசார்ஜ், ஆண்டு முழுதும் இலவச கால்ஸ், இணைய வசதி: அசத்தும் ஜியோ திட்டம்
Jio Yearly Plan: ஜியோவின் ஒரு மலிவான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். அதில் ஆண்டு முழுவதும் சிறந்த சேவைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
ஜியோ ஆண்டுத் திட்டம்: ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மிகவும் மலிவானவை என்பது அனைவருக்கும் தெரியும். இவை வாடிக்கையாளர்களிடையே மிகவும் விரும்பப்படுகின்றன. நீங்கள் ஜியோ ப்ரீபெய்ட் சேவையைப் பயன்படுத்தினால், உங்களுக்குப் பிடித்தமான திட்டத்தைத் தேர்வு செய்யக்கூடிய வகையில், பல வகையான திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்புவோருக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். ஜியோவின் ஒரு மலிவான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். அதில் ஆண்டு முழுவதும் சிறந்த சேவைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் என்ன? அதன் சிறப்பம்சம் என்ன?
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜியோ திட்டத்தின் விலை ரூ.2545 ஆகும். இது நிறுவனத்தின் மலிவான வருடாந்திர செல்லுபடியாகும் திட்டமாகும். இது பலரது பட்ஜெட்டில் எளிதில் பொருந்திவிடும்.
மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் இதில் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்தத் திட்டத்தை நீங்கள் செயல்படுத்தினால், அது உங்களுக்கு லாபகரமான டீலாக இருக்கும்.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி கூறினால், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 365 நாட்கள் வேலிடிட்டியை பெறுவார்கள். மேலும், இதில் வாடிக்கையாளர்கள் 504 ஜிபி தரவைப் பெறுகிறார்கள். இது ஆண்டின் இணையத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயனுள்ளதாக இருக்கும். தினசரி அடிப்படையில் பார்த்தால், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி தரவு கிடைக்கும். இது பொதுவான இணைய பயன்பாட்டிற்கு போதுமானது.
இதனுடன், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு வருடத்திற்கு தினசரி 100 எஸ்எம்எஸ் -க்கான வசதியையும் பெறுகிறார்கள். இது தேவைப்படும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சங்கள் அனைத்தையும் இந்த திட்டத்தில் பெறுவதோடு, இன்னும் சில அம்சங்களையும் பயனர்கள் கூடுதலாக பெறலாம்.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவும் கிடைக்கும். இந்தத் திட்டம் பயனர்களுக்கு ஒரு மிக பயனுள்ள திட்டமாக கண்டிப்பாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ