ஆபர்களை அள்ளி தரும் ஜியோ...336 நாட்கள் வேலிடிட்டி
Jio Recharge Plan: ஒரே ரீசார்ஜில் 336 நாட்கள் வரை வேலிடிட்டியாகும் பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இன்று உங்களுக்காக அத்தகைய ஒரு பிளானை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
ரிலையன்ஸ் ஜியோ 336 நாட்கள் ரீசார்ஜ் திட்டம்: தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிய ஆண்டு முதல் சிறப்பான சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது நாம் காண உள்ள ரீசார்ஜ் திட்டத்தில் தகுதியான வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள், அன்லிமிடெட் டேட்டா, போன்ற பலன்களைப் பெறுவார்கள். ஒரே ரீசார்ஜில் 336 நாட்கள் வரை வேலிடிட்டியாகும் பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இன்று உங்களுக்காக அத்தகைய ஒரு பிளானை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதன் முழு விவரத்தை இங்கே காணபோம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.2545 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 336 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 504ஜிபி டேட்டாவை பெற முடியும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க | Amazon Sale 2023; 40% ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!!... அமேசான் அசத்தல் ஆஃபர்
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடாபோன் ஐடியா) போன்ற நெட்வொர்க்குகள் 365 அல்லது 336 நாட்கள் செல்லுபடியாகும் வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரீசார்ஜ் எப்படி செய்வது
பிஎஸ்என்எல்: https://portal2.bsnl.in/myportal/quickrecharge.do . அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் அவர்களது சொந்த ஆப் களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது. Paytm, PhonePe, Google Pay அல்லது வேறு ஏதேனும் BHIM போன்றா UPI apps மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை அல்லது வலைதளம் மூலமாக ரீசார்ஜ் செய்வது உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால் அருகில் உள்ள வங்கி ஏடிஎம்’முக்கு சென்றும் ரீசார்ஜ் செய்யலாம்.
மேலும் படிக்க | Realme 9: ரூ.1999-க்கு பக்கா கேமரா குவாலிட்டியுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன்! செம ஆஃபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ