அடே! ஜியோ இப்படியா பண்ணுவ? இனி ஜியோ சினிமா இலவசம் இல்ல..
Jio: இதுவரை இலவசமாக பார்த்துக் கொண்டிருந்த ஜியோ சினிமாவுக்கு வாடிக்கையாளர்கள் சந்தா செலுத்த வேணும். மாத சந்தா மற்றும் கட்டண விவரங்களை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.
ஜியோ இதுவரை ஜியோ சினிமா ஓடிடி -ஐ இலவசமாக கொடுத்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளையும் இலவசமாக கொடுத்த ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இரு நிறுவனங்களும் இப்போது கூட்டணி சேர்ந்துவிட்டதால், ஜியோ வாடிக்கையாளர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது ரிலையன்ஸ். ஆம், ஜியோ சினிமா இனி இலவம் இல்லை. இத்தனை நாள் இலவசமாக ஜியோ சினிமா ஓடிடி -ஐ பார்த்த வாடிக்கையாளர்கள் இனி மாத சந்தா செலுத்த வேண்டும். அதற்கு கட்டணத்தை ஜியோ நிர்ணயித்திருக்கிறது. விரைவில் ஐபிஎல் தொடங்க இருப்பதால் ஜியோ சினிமா சந்தா குறித்த இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜியோ சினிமா மாத சந்தா கட்டணம் விவரங்களை பார்க்கலாம்.
ஜியோ வாடிக்கையாளர்கள் மொபைல் ரீச்சார்ஜ் செய்யும்போது சில பிளான்களில் இலவசமாக ஜியோ சினிமா சந்தா இருக்கும். அதனால் அதற்காக பிரத்யேகமாக மாத சந்தா கட்டணம் ஏதும் செலுத்தாமல் இருந்தனர். மற்ற வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அந்த கட்டணம் தான் சத்தமில்லாமல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மாதம் 200 ரூபாய் ஜியோ சினிமா சந்தாவாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா... இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் - முழு விவரம்
அதாவது மாதம் 99 ரூபாய் சந்தா கட்டணம், ஆண்டுக்கு 1188 ரூபாய் செலுத்தினால் ஜியோ சினிமா பார்த்து ரசிக்கலாம். பழைய கட்டணத்தை விட இது189 ரூபாய் அதிகமாகும். அதேநேரத்தில் ஆண்டு சந்தாவை சத்தமில்லாமல் நீக்கியிருக்கிறது ஜியோ. இனி மாத சந்தா 99 ரூபாய் மட்டுமே செலுத்தி ஜியோ சினிமாவை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து வாடிக்கையாளர்கள் பேசும்போது, ஜியோசினிமா பிரீமியத்திற்கான வருடாந்திர சந்தா திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ எப்போது விலகியது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது பயனர்களுக்கு மாதாந்திர சந்தா மட்டுமே விருப்பமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
ஜியோ சினிமா பிரீமியம் சந்தா: நன்மைகள்
இந்த சந்தாவை பெறும் வாடிக்கையாளர்கள் "பெஸ்ட் ஆஃப் ஹாலிவுட்" என்றும் அழைக்கப்படும் ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தில் HBO மற்றும் பிற சேனல்களின் பிரீமியம் கன்டென்டுகளுக்கான அணுகலை பெறலாம். பயனர்கள் அதிகபட்ச வீடியோ மற்றும் ஆடியோ ஆதரவுடன் இந்த படங்களை பார்த்து ரசிக்கலாம். ஒரு சந்தாவில் இருந்து அதிகபட்சம் 4 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிஸ்னி - ஜியோ கூட்டு
இந்த அறிவிப்பு ஜியோ - டிஸ்னி கூட்டு சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்குவதாக அறிவிப்பு வெளியிட்டபிறகு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனங்களும் ஒப்பந்த அடிப்படையில் பார்ட்னர்ஷிப் அமைத்து இனி செயல்பட இருக்கின்றன. புதிய நிறுவனத்தின் தலைவராக நீட்டா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியாவிலேயே முதல்முறை... குறைந்த விலையில் வருகிறது ஜியோ 5G மொபைல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ