புதுடில்லி: ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல வகையான அற்புத திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு வருகின்றது. தற்போதும் ஜியோ ஒரு அட்டகாசமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jio Fiber தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரே நேரத்தில் பல புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் மாதத்திற்கு ரூ .939 முதல் தொடங்கும். புதிய திட்டங்களைத் தொடங்கிய நிறுவனம் மற்றொரு அறிவிப்பையும் அளித்துள்ளது. இதன் படி, புதிய பயனர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்துடன் இணைய பெட்டி அதாவது ரவுட்டர் இலவசமாகக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் எந்த நிறுவல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.


வாடிக்கையாளர்களுக்கு அதிக பணம் மிச்சமாகும்


நிறுவனத்தின் அறிவிப்பின் படி பார்த்தால், வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ரூ .1500 வரை சேமிக்க முடியும். பயனர்கள் குறைந்தபட்சம் 6 மாதம் செல்லுபடியாகும் திட்டத்தை வாங்கினால் மட்டுமே இலவச இணைய பெட்டி மற்றும் இலவச நிறுவலின் பலனைப் பெறுவார்கள். அனைத்து திட்டங்களும் ஜூன் 17 முதல் பயனர்களுக்கு கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்தின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதாகும்.


ALSO READ: Jio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்


இந்த திட்டங்கள் கிடைக்கின்றன


ரூ. 399 திட்டத்தில் 30 MBPS, ரூ. 699 திட்டத்தில் 100 MBPS, ரூ. 999 திட்டத்தில் 150 MBPS மற்றும் ரூ. 1499 திட்டத்தில் 300 MBPS பதிவேற்ற மற்றும் பதிவிறக்க வேகம் கிடைக்கும். இது தவிர, 1 GBPS வரையிலான திட்டங்களும் ஜியோ ஃபைபரில் கிடைக்கின்றன.


இலவச OTT செயலிகளின் நன்மைகள்


ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .999 போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் இணைப்புடன், வாடிக்கையாளர்களுக்கு இலவச OTT செயலிகளின் நன்மையும் கிடைக்கும். அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ -5, வூட் செலக்ட், சன் நெக்ஸ்ட் மற்றும் ஹோய்சோய் போன்ற 14 பிரபலமான OTT செயலிகளை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 


ரூ. 1499 திட்டத்தில் நெட்ஃபிக்ஸ் (Netflix) உட்பட அனைத்து 15 OTT செயலிகளும் கிடைக்கும். இந்த செயலிகளின் சந்தை மதிப்பு ரூ .999 ஆகும். OTT செயலிகள் நல்ல முறையில் இயங்குவதற்காக ரூ .1000 பாதுகாப்பு வைப்புத்தொகையை வாங்கிகொண்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸை இலவசமாக  வழங்கும்.


ALSO READ: BSNL vs Jio: பிஎஸ்என்எல், ஜியோ போட்டி; எந்த பிளான் பெஸ்ட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR