மும்பையில் ஜாம்நகரில் ஆடம்பரமாக மூன்று நாள் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண விழா தான் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சமீபத்தில் நடந்த தனது இளைய மகன் ஆனந்தின் திருமண விழாவில், தனது சிறப்பான ஆடை அலங்காரம்  மூலம் அனைவரையும் ஈர்த்து வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடி ஏ9 உள்ளது என்ற செய்தி தீயாய் பரவி வருகிறது. நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த கார் நீடா அம்பானியிடம் (Nita Ambani) உள்ளது என்பது உண்மைதான் என்றாலும் இது ரூ.90 கோடி  மதிப்பிலான ஆடி ஏ9 கார் உண்மை தகவல் தானா என்பதை அறிந்து கொள்ளலாம்.


தற்போது அம்பானி குடும்பம் முழுவதும் திருமண விழா காரணமாக, இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பார்வை முழுவதும் அவர்கள் மீது தான் உள்ளது. அவர்கள் அனுபவிக்கும்  ஆடம்பர வசதிகள் மற்றும் செல்வ வளம், அவர் செய்யும் செலவுகள், அவர்கள் அணியும் ஆடம்பர உடைகள், நகைகள், என அனைத்தும் பேசு பொருளாக ஆகியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல இணையதளங்கள் வாசகர்களை கவரும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் இந்த ஆடி கார் விவகாரம்.


மேலும் படிக்க | தங்கம் போல் ஜொலித்த அம்பானி மருமகள்... ராஜ கம்பீரத்துடன் நிதா அம்பானி - ரிசப்ஷென் காஸ்ட்யூம் இதோ!


ஆடம்பர் கார் பிராண்டான ஆடி காரின் ஏ9 சமேலியன் மாடல் கார் நீடா அம்பானியிடம் இருப்பதாக சில ஊடக நிறுவனங்கள்  வதந்தியை பரப்பின. ஆனால், இதுவரை "ஆடி ஏ9" என்ற எந்த மாடல் காரும் அறிமுகப்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் கார் நிறுவனம் உருவாக்கிய கான்செப்ட் கார் தான் ஆடி ஏ9. இது அழகாக வடிவமைக்கப்பட்ட கான்செப்ட் கார். அசல் கார் இதுவரை தயாரிக்கப்பட்டு விற்கப்படவில்லை. இதன் சிறப்பு என்னவென்றால், நிறத்தை மாற்றும் எலக்ட்ரானிக் பெயிண்ட் சிஸ்டம் இந்த காரில் உள்ளது.  இது எதிர்கால சொகுசு கார்கள் இப்படித் தான் இருக்கும் என  உதாரணம் காட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட கான்சப்ட் கார் இது என்பது தான் உண்மை நிலை. இதுவரை இந்த கார் யாருக்கு விற்கப்படவில்லை.


நிதா அம்பானியின் உண்மையான விலை உயர்ந்த கார் என்பது அவர் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகும். ரூ.12 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்ட இந்த கார், ஃ ரோஸ் குவார்ட்ஸ் நிறத்தில் ஆடம்பரமான வெளிப்புறத் தோற்றமும், ஓர்கிட் வெல்வெட் நிறத்தில் சகல வசதிகளையும் கொண்ட உட்புறத் தோற்றமும் கொண்டுள்ளது. காரில் உள்ள பொன்னிற அலங்கார வடிவமைப்புக்கள் அதன் தோற்றத்தை மேலும் மேம்படுத்தியுள்ளாது. காரில் நிதா அம்பானியின் முதலெழுத்துகள் இருப்பதையும் காணலாம்.


மேலும் படிக்க | அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ