இன்று மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனை குறைந்த விலைக்கு வாங்க நல்ல வாய்ப்பு. மோட்டோரோலாவின் எட்ஜ் 50 நியோ போன் எவ்வளவு ரூபாய்க்குக் கிடைக்கும், அசல் விலை, தள்ளுப்படிக்கு பிந்தைய விலை, எங்கு வாங்கினால் மலிவாக கிடைக்கும், எப்படி வாங்குவது என அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு முன்னதாக, சீனவின் லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலாவின் எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்துக் கொள்வோம். எட்ஜ் 50 சீரிஸில் வெளிவந்துள்ள ஐந்தாவது ஸ்மார்ட்போன் ஆகும். எட்ஜ் 50, எட்ஜ் 50 ஃப்யூஷன், எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 50 புரோ மாடல்கள் இதற்கு முன்பு வெளியாயுள்ளன.


6.4 இன்ச் pOLED டிஸ்பிளே, மீடியாடெக் டிமான்சிட்டி 7300 ப்ராஸசர், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்ட இந்த போன், ஐந்து ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போனில், 50+13+10 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. அதில், 32 மெகாபிக்சல் கொண்டுள்ள முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ.... நாளொன்றுக்கு 9 ரூபாயில் தினம் 2.5 GB டேட்டா.... இன்னும் பல நன்மைகள் 


4,301mAh பேட்டரி கொண்ட இந்த போன், 68 வாட்ஸ் சார்ஜர் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, வயர்லஸ் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது. 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை ரூ.23,999 ஆகும். இன்று (2024, செப்டம்பர் 24)  முதல் விற்பனை ஆரம்பமாகிறது.


மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (MOTOROLA Edge 50 Neo) விலை


HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999க்கு கிடைக்கும். தவணை சலுகையில் வாங்கினால் மாதத்திற்கு ரூபாய் 3583 என்ற மாதாந்திர தவணை (EMI) ஏற்றதாக இருக்கும்.  


மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ கேமரா
MOTOROLA Edge 50 Neo போனின் கேமராவில், 50MP அல்ட்ரா பிக்சல் உண்டு. இதில் Sony LYTIA 700C சென்சார், டெலிஃபோட்டோ, 13 MP அல்ட்ராவைடு மற்றும் 32 MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளா.


மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ பேட்டரி
 4310 mAh பேட்டரியைக் கொண்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன், 68 W டர்போபவர் மூலம் 15 நிமிடங்களில் 0% முதல் 50% வரை சார்ஜ் ஆகக் கூடியது.


மேலும் படிக்க | அடேங்கப்பா! நம்ம கைக்குள்ள அடக்கமாகும் செல்போன்ல இத்தனை சென்சார் இருக்கா?


மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ டிஸ்ப்ளே
16.25 செமீ (6.4) POLED LTPO சூப்பர் HD டிஸ்ப்ளே 1.5K தெளிவுத்திறன், HDR10+ பிரகாசம் 3000 nits வரை உள்ளது. DCI-P3 மற்றும் 10-பிட் கொண்ட சினிமா வண்ணங்களை (cinematic colors) வழங்குகிறது.


மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ செயலி
இது மேம்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் ஐந்து வருட மென்பொருள் ஆதரவு, ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் AI கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சேமிப்பகம்
512 ஜிபி சேமிப்பு அல்லது 256 ஜிபி உள்ள போன் எட்ஜ் 50 நியோ.


ஹலோ UI மென்பொருள்
ஹலோ UI தனிப்பயனாக்கம் மற்றும் Moto Unplugged போன்ற தனித்துவமான அம்சங்களுடன் வருகிறது மோட்டோரோலாவின் எட்ஜ் 50 நியோ போன்.


மேலும் படிக்க | ஒரே இரவில் ஐபோன் 15 & 14 விலைகள் குறைந்தன! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிம் குக்கின் பிளான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ