ஒரே இரவில் ஐபோன் 15 & 14 விலைகள் குறைந்தன! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிம் குக்கின் பிளான்!

iPhone 15 & 14 Prices Reduced Overnight : ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் இணையதளம் தெரிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2024, 10:26 AM IST
  • ஓவர்நைட்ல அதிரடியா விலை குறைஞ்ச ஐபோன்!
  • ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை குறைப்பு
  • ஆப்பிள் இணையதளம் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஒரே இரவில் ஐபோன் 15 & 14 விலைகள் குறைந்தன! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிம் குக்கின் பிளான்! title=

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலைகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டுள்ளன, இது ஐபோன் வாங்க ஆசையுள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமாக மாறிவிட்டது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் இணையதளம் தெரிவித்துள்ளது

ஐபோன்கள் விலை

ஐபோன்கள் விலை அதிரடியாய் குறைக்கப்பட்டன. இந்த மாதம் அறிமுகமான ஐபோன் 16 சீரிஸ் விற்பனையில் உள்ளது, புதிய போன் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து,  பழைய மாடல்களை மாற்றி, லேட்டஸ்ட் மாடல் வாங்குபவர்களுக்கும் எக்ஸேஞ்ச் ஆஃபர்களையும் ஆப்பிள் வழங்கியுள்ளது. அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலைகள் அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஐபோன் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது. ஆப்பிள் இணையதளத்தின்படி ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15 இன் புதிய விலை

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15 இன் 128GB மாடலின் விலை ரூ.79,900ல் இருந்து ரூ.69,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 பிளஸ் விலை ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளது, தற்போது ஐபோன் 15 பிளஸ் 128ஜிபி மாடல் ரூ.79,900 என்ற விலைக்கு கிடைக்கிறது. 

மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ.... நாளொன்றுக்கு 9 ரூபாயில் தினம் 2.5 GB டேட்டா.... இன்னும் பல நன்மைகள் 

ஐபோன் 15 பழைய விலையும் புதியதும்
ஐபோன் 15 முன்பு ரூ 79,900 என்று இருந்தது, தற்போது 69,900 ரூபாய்கு விற்கப்படுகிறது. 10 ஆயிரம் விலை குறைந்துள்ளது. அதேபோல, ஐபோன் 15 பிளஸ் 10,000 ரூபாய் விலை குறைத்து 79,900 ரூபாய்க்கு கிடைக்கும்.

ஐபோன் 14 இன் புதிய விலை

இரண்டு வருடங்கள் பழமையான ஐபோன் 14 இன் விலை மேலும் குறைந்துள்ளது. இப்போது அதன் 128ஜிபி மாடலின் விலை ரூ.59,900 ஆக உள்ளது. 2022 இல் ஐபோன் சீரிஸ் 14 அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது ரூ.79,900 என்ற விலையில் இருந்தது. ஐபோன் 16 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இது ரூ.69,900க்கு கிடைத்தது.  ஐபோன் 14 விலை, இனி அதிகாரபூர்வமாக ரூ 59,900 ஆக இருக்கும். நேற்று வரை இது 10 ஆயிரம் கூடுதலாக ரூ 69,900 என்ற விலைக்கு விற்கப்பட்டது.

ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் 16 சீரிஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ.79,900 என்ற விலையில் தொடங்குகிறது. அதேபோல இந்தியாவில் ஐபோன் 16 பிளஸ் விலை ரூ.89,900 இல் தொடங்குகிறது. iPhone 16 Proவின் அடிப்படை விலை ரூ.1,19,900 என்றால், iPhone 16 Pro Max விலை 1,44,900 ஆகும்.

ஐபோன் 16 ப்ரோ 128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வருகிறது, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அடிப்படை மாறுபாட்டில் 256 ஜிபி உள்ளது. இந்த விலைகளானது, கடந்த ஆண்டு ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் வெளியீட்டு விலையை விட மிகக் குறைவு. முன்னதாக இவை, ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900 என்ற அளவில் இருந்தன.

மேலும் படிக்க | அடேங்கப்பா! நம்ம கைக்குள்ள அடக்கமாகும் செல்போன்ல இத்தனை சென்சார் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News