LeTV நிறுவனம், இன்று (31 மே 2022),  சீனாவின் உள்நாட்டு சந்தையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஆரவாரம் இல்லாமல் அமைதியாக அறிமுகப்படுத்தியது. இது Y1 Pro மாடல் ஆகும். இது ஒரு புதிய பட்ஜெட் தர கைபேசியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LeTV Y1 Pro: வடிவமைப்பு


இதன் வடிவமைப்பு காண்பவரை கவரும் வகையில் உள்ளது. LeTV Y1 Pro ஆனது ஆப்பிள் ஐபோன் 13 மாடலை அதிகமாக ஒத்துப்போகும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஒரு தட்டையான பின்புற பேனல் உள்ளது. எனினும் இதன் கார்னர்கள், அதாவது மூலைகள் வட்டமாக உள்ளன. 


இந்த போனின் கேமரா தொகுதி மாட்யூல் மற்றும் இமேஜ் சென்சார் அமைப்பும் ஐபோனுடன் ஒத்துப்போகின்றன. இவற்றின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. 


முன்புறத்தில், இந்த போன் ஒரு நாட்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஒரு உலோக சட்டத்தால் சூழப்பட்டுள்ளது. சீன பிராண்டான LeTV, இந்த ஸ்மார்ட்போனை பட்ஜெட் ஃபிளாக்ஷிப் மாடலாக சந்தைப்படுத்துகிறது. மிகவும் குறைந்த விலையில் நிறுவனம் இந்த போன் மூலம் பிரீமியம் உருவாக்க தரத்தை வழங்குகிறது.


மேலும் படிக்க | iQOO Neo 6: 50% தள்ளுபடியில் அமேசானில் ஸ்மார்ட்போன் விற்பனை


போனின் டிஸ்ப்ளே எப்படி உள்ளது?


இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஒரு 6.5 இன்ச் எல்சிடி பேனல் ஆகும். இது 1560 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டது. ஹூட்டின் கீழ், இது ஒரு UNISOC Tiger T310 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 4ஜி இயக்கப்பட்ட சிப்செட் ஆகும். 


இந்த செயலி 4ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை உள்ளக சேமிப்பகத்துடன் (இண்டர்னல் ஸ்டோரேஜ்) இணைக்கப்பட்டுள்ளது. 4,000mAh பேட்டரி பேக் சாதனத்தை இயக்குகிறது. இது நிலையான 10W சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்டை ஆதரிக்கிறது.


பிற விவரக்குறிப்புகள்:


இந்த ஸ்மார்ட்போனில் டியூயல் கார்ட் 4ஜி சப்போர்ட் உள்ளது. Le OS 9.1,9.5மிமீ தடிமன் மற்றும் 208 கிராம் எடையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய சாதனம் பல சேமிப்பக உள்ளமைவுகளில் கிடைக்கிறது. 


இதன் விலை என்ன?


4ஜிபி + 32ஜிபி மாடலின் விலை 499 யுவான் (சுமார் 75 அமெரிக்க டாலர்கள்) இலிருந்து தொடங்குகிறது. 4ஜிபி + 128ஜிபி மாடலின் விலை 699 யுவான் (தோராயமாக 105 அமெரிக்க டாலர்கள்), மற்றும் டாப் எண்ட் 4ஜிபி + 256ஜிபி வகையின் விலை 899 யுவான் (தோராயமாக 135 அமெரிக்க டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஸ்மார்ட்போன் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு உள்ளிட்ட பல வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது. LeTV Y1 Pro-க்கான ப்ரீ-ஆர்டர்கள் தற்போது தொடங்கியுள்ளன. 


மேலும் படிக்க | எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR