கார் துறையின் செடான் பிரிவு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட கார் பிரிவு ஆகும், இதில் நடுத்தர ரேஞ்ச் முதல் உயர் ரேஞ்ச் வரையிலான கார்கள் உள்ளன. இதில் நாம் மாருதி சியாஸ் பற்றி பேச உள்ளோம், அதன்படி இந்த காரின் பிரீமியம் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் மைலேஜ் ஆகியவற்றால் இது அதிகளவு விரும்பப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருதி சியாஸின் ஆரம்ப விலை ரூ. 8.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) டாப் வேரியண்ட்டுக்கு செல்லும் போது ரூ.11.98 லட்சமாக உயர்கிறது. ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மூலம் இந்த செடான் காரை பாதி விலைக்கும் குறைவாக நீங்கள் வாங்கலாம்.


மேலும் படிக்க | ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி கார் என ஆடம்பர கார் பிரியர் ஜஸ்டின் பீபரின் கார்கள்


மாருதி சியாஸில் கிடைக்கும் சலுகைகள், செகண்ட் ஹேண்ட் வாகனங்களை ஆன்லைனில் வாங்கும் மற்றும் விற்கும் வெவ்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. அவற்றில் சிறந்த சலுகைகளின் விவரங்களை நாங்கள் உங்களுக்கு தர உள்ளோம்.


* முதல் சலுகை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் இருந்து பெறப்பட்டது. அதன்படி இதில் மாருதி சியாஸின் 2014 மாடல் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு இந்த காரின் விலை ரூ.3,70,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


* இரண்டாவது சலுகை கார்வாலே இணையதளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதன்படி இதில் மாருதி சியாஸின் 2016 மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு அதன் விலை ரூ.3.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


* மூன்றாவது சலுகை மாருதி சுசுகியின் ட்ரூ வேல்யூ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் மாருதி சியாஸின் 2017 மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு இந்த காரின் விலை ரூ.3,98,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை வாங்கினால், 6 மாத வாரண்டி, மூன்று இலவச சேவை மற்றும் நிதித் திட்டங்களையும் பெறலாம்.


மாருதி சியாஸின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்


மாருதி சியாஸின் இன்ஜின் மற்றும் பவர் பற்றி பேசுகையில், 1462 சிசி இன்ஜின் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகும், இது 105 பிஎஸ் ஆற்றலையும் 138 என்எம் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைலேஜ் தொடர்பான நிறுவனத்தின் கூற்று என்னவென்றால், செடான் கார் 20.65 கிமீ லிட்டருக்கு மைலேஜ் தருகிறது. இந்த மைலேஜ் ஏஆர்ஏஐ ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது.


காரின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், பாசிவ் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR