ஐபோன் 12 மினி சலுகை: ஐபோன் 12 மினி ஒரு சக்திவாய்ந்த மாடல் ஆகும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள போனாக உள்ளது. இந்த மாடலின் அளவு மிகவும் சிறியதாக இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இது மக்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த மாடலின் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் விலையைபார்த்து இதை வாங்குவதில் நீங்கள் தயக்கம் காட்டினால், உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியை இந்த பதிவில் காணலாம். இனி அதிக விலை பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏனெனில், இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்த அட்டகாசமான மாடலை பாதிக்கும் குறைவான விலையில் எப்படி வாங்குவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 



பெரும் தள்ளுபடி கிடைக்கும்


இந்த போனில் பெரிய அளவிலான தள்ளுபடி கிடைக்கின்றது. ஐபோன் 12 மினியை வாங்க, நீங்கள் நினைத்துக்கூட பார்காத ஒரு சிறிய தொகையை செலுத்தினால் போதும். இந்த மாடலின் உண்மையான விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே 36 சதவீதம் தள்ளுபடி அளித்து வருகிறது. 


மேலும் படிக்க | நெட்பிளிக்ஸில் இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவ்வளவுதான்... 


இந்த தள்ளுபடிக்கு பிறகு இதை வாங்க ரூ.37,999 மட்டும் செலுத்தினால் போதும். இந்த தொகையும் அதிகம் என நீங்கள் நினைத்தால், இதில் மற்றொரு சலுகையும் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 



இந்த மாடலை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.21,900 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் அதாவது பரிமாற்ற சலுகையாகவும் வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச் போனஸை நீங்கள் பயன்படுத்துக்கொள்ள முடிந்தால், இந்த மாடலை வாங்கும்போது சுமார் ரூ.44 ஆயிரத்தை வாடிக்கையாளர்கள் மிச்சப்படுத்தலாம். இது மிகப்பெரிய தள்ளுபடியாகும். இதன் மூலம் இந்த போனை வாடிக்கையாளர்கள் மிகக்குறைந்த விலையில் வாங்கிச்செல்லலாம். 


மேலும் படிக்க | ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான்! 1 வருடம் வேலிடிட்டி; ஆடிப்போய் இருக்கும் ஏர்டெல் - VI 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ