ஐபோன் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனான ஐபோன் 14 -ஐ மிகக்குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபோன் 14 -க்கு ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகும், இந்த போனின் விலை மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. ஃபிளாக்ஷிப் போன்கள் பாதி விலைக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
பிளிப்கார்ட், 2022 ஐபோனில் ரூ.45,000 வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் சமீபத்திய ஐபோன் வாங்க விரும்பினால், இன்று அதற்கு சரியான வாய்ப்பு வந்துள்ளது. ஐபோன் -இல் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி இந்த பதிவில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone 14: சலுகைகள் & தள்ளுபடிகள்


ஐபோன் 14 இன் அறிமுக விலை ரூ.79,900 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த அசத்தலான போன் ரூ.68,999க்கு கிடைக்கிறது. அதாவது போனில் சுமார் 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இவற்றின் காரணமாக போனின் விலை இன்னும் கணிசமாக குறையும்.


மேலும் படிக்க | BSNL: இனி இரவிலும் கொண்டாட்டம்தான்... பிஎஸ்என்எல் கொடுக்கும் மாஸான டேட்டா திட்டம்!


iPhone 14: வங்கி சலுகைகள்


வாடிக்கையாளர்கள், ஐபோன் 14 ஐ வாங்க எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 4,000 ரூபாய் தள்ளுபடி சலுகை கிடைக்கும். இது இந்த போனின் விலையை மிகப்பெரிய அளவில் குறைத்து விடுகிறது. இருப்பினும், இந்த சலுகை ஐபோன் 14 ரோடாக்ட் ரெட் மாடலில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிற வண்ண மாறுபாடுகள் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க. குறிப்பிடப்பட்ட சலுகை 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு பொருந்தும். அதாவது, இந்த போனில் முழுக்க முழுக்க 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். 


இதைத் தவிர இந்த போனை வாங்கும்போது பிளிப்கார்ட்டில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும், அதாவது பரிமாற்ற சலுகையும் உள்ளது. 


iPhone 14: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


ஐபோன் 14 -ல் 30 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி கிடைக்கும். ஏனினும், இந்த சலுகையை பெற வாடிக்கையளர்கள் தங்களது பழைய போன் நல்ல நிலையிலும், புதிய மாடலாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த சலுகையை முழுமையாக பெறும் வாடிக்கையாலர்களுக்கு ரூ.30,000 முழுத் தள்ளுபடி கிடைக்கும். 


இந்த அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், வாடிக்கையாளர்கள் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை வெறும் 31,999 ரூபாய்க்கு வாங்க முடியும். 


மேலும் படிக்க | ட்விட்டரில் உரையாடலைப் புரிந்துகொள்ள என்ன தேவை? ட்விட்டர் ஏபிஐ லேட்டஸ்ட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ