பம்பர் தள்ளுபடி, வியக்க வைக்கும் விலை: iPhone-ஐ அள்ளிச்செல்லும் மக்கள்

iPhone Bumper Offer: ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற டாப்-எண்ட் போன்களை குறைந்த விலையில் வாங்க விருப்பமா? அப்படியென்றால், சில முக்கிய விஷயங்களை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2023, 07:39 AM IST
  • ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
  • கூடுதல் பாதுகாப்புக்காக ஃபேஸ் ஐடி சென்சாரும் இதில் உள்ளது.
  • ஃபோன் ஆப்பிளின் A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது.
பம்பர் தள்ளுபடி, வியக்க வைக்கும் விலை: iPhone-ஐ அள்ளிச்செல்லும் மக்கள்

ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட யூனிகார்னில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன் 14 செப்டம்பர் 2022 இல் 128 ஜிபி பதிப்பிற்காக அசல் விலையான ரூ.79,900 -இல் வெளியிடப்பட்டது. ஆனால் யூனிகார்னில் இருந்து இந்த பிரீமியம் போனை வாடிக்கையாளர்கள் வெறும் 34,000 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்டோர் வழங்கும் அனைத்து தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால், இந்த அசத்தல் தள்ளுபடி அவர்களுக்கு கிடைக்கும். 

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற டாப்-எண்ட் சாதனங்களை குறைந்த விலையில் வாங்க விருப்பமா? அப்படியென்றால், சில முக்கிய விஷயங்களை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

iPhone 14: வெறும் 34 ஆயிரம் ரூபாய்க்கு இதை வாங்கலாம்

இந்த ஆஃபரில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டால், 128ஜிபி ஸ்டோரெஜ் தள்ளுபடி செய்யப்பட்ட iPhone 14 ஐ வெரும் 34,000 ரூபாய்க்கு வாங்கலாம். யூனிகார்ன் ஸ்டோர் தற்போது ரூ.10,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.69,000 ஆக குறையும். 

இது தவிர, எஸ்டிஎஃப்சி வங்கி இந்த ஸ்மார்ட்போனில் ரூ. 4,000 தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை பரிமாற்றிகொண்டால் ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும், அதாவது பரிமாற்ற தள்ளுபடியையும் பெறலாம். உங்கள் பழைய ஃபோனுக்கு ஈடாக ரூ.25,000 வரை தள்ளுபடி பெறலாம். உங்கள் பழைய போன் புதிய மாடலாக இருந்தால், அதற்கு நல்ல விலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | CHATGPT: ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி பயன்படுத்துவது எப்படி?

iPhone 14: விவரக்குறிப்புகள்

ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக ஃபேஸ் ஐடி சென்சாரும் இதில் உள்ளது. ஃபோன் ஆப்பிளின் A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 16-கோர் நியூரல் பிராசசிங் யூனிட் (NPU) மற்றும் 5-கோர் கிராபிக்ஸ் செயலி ஆகியவை உள்ளன. போனின் பிராசசர் 4 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய மூன்று சேமிப்பக விருப்பங்களூம் வழங்கப்பட்டுள்ளன. 

iPhone 14: கேமரா

ஐபோன் 14 இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12எம்பி முதன்மை வைட்-ஆங்கிள் சென்சார், சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 12எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் ஆகியவை உள்ளன. மேலும், முன்பக்கத்தில் 12எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. கேமரா அமைப்பு டால்பி விஷன் வீடியோ பதிவையும் ஆதரிக்கும் வல்லமை கொண்டது.

மேலும் படிக்க | Jio IPL Plans: ஐபிஎல் போட்டிகளை தடையின்றி பாருங்க... டேட்டாவை வாரிவழங்கும் ஜியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News