Black Friday Sale : இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் ட்ரெண்ட் அதிகமாகிவிட்டது. இதில் பல அனுகூலங்களும் உள்ளன. ஒருபுறம், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்கமுடியும். மறுபுறம் அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நாம் உலகின் மேற்கத்திய நாடுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு சேல் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த விற்பனையின் பெயர் 'பிளாக் ஃப்ரைடே சேல்' (‘Black Friday Sale’). இது வழக்கமாக இந்தியாவில் நடத்தப்படுவதில்லை, ஆனால் சில ஆண்டுகளாக பல தளங்கள் மற்றும் பிராண்டுகள் இந்த விற்பனையை இந்தியாவிலும் செய்கின்றன. பிளாக் ஃப்ரைடே சேல் மூலம் பொருட்களை மிகக் குறைந்த விலையில் எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.


பிளிப்கார்ட் வழங்கும் Black Friday Sale  
நீங்களும் இந்தியாவில் அமர்ந்து Black Friday Sale -ஐ அனுபவிக்க விரும்பினால், இன்று அதாவது, நவம்பர் 26 முதல், பிளிப்கார்ட் (Flipkart) போன்ற தளங்களில் அதை செய்யலாம். இந்த தளங்களில் இன்று இந்த சேல் துவங்குகிறது. பிளிப்கார்டில், ஐ-போன் (iPhone 12) போன்ற சிறந்த ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். 


மேலும், அமேசான் இந்தியாவிற்கு பதிலாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமேசான் தளத்திலிருந்து ஷாப்பிங் செய்தால், Black Friday Sale-ஐப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் வாங்க விரும்பும் பொருள் உலகளாவிய ஷாப்பிங்கில் கிடைக்குமா என்பதை மட்டும் நீங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு தர்ட் பார்டி கூரியர் சேவைகள் மூலமாகவும் கட்டணம் செலுத்தி உங்கள் பொருட்களை ஆர்டர் செய்யலாம்.


ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 49-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Realme ஸ்மார்ட்போன்


இந்தியாவில் Black Friday Sale


இந்தியாவில் பிளாக் ஃபிரைடே விற்பனைக்கான வழக்கம் இல்லை என்றாலும், இந்த விற்பனை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்ற போதிலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் மற்றும் பிக் ஃப்ரைடே விற்பனையின் பிரபலம் காரணமாக, இந்தியாவில் உள்ள Xiaomi, Amazon மற்றும் Flipkart போன்ற தளங்களும் இந்த பிளாக் ஃபிரைடே விற்பனையின் இந்திய பதிப்பை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த தளங்கள் இந்த விற்பனையின் போது, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல வித பொருட்களில் பல வித தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வழங்குகிறார்கள்.


பிளாக் ஃப்ரைடே விற்பனை என்றால் என்ன


பிளாக் ஃப்ரைடே விற்பனை முக்கியமாக அமெரிக்காவில் நடைபெறும். இந்தியாவில் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையும், அமேசானின் (Amazon) கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையும் எப்படி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ, அதேபோல் அமெரிக்காவில் பிளாக் ஃப்ரைடே விற்பனையும் நடக்கிறது. இந்த சேல், தேங்ஸ்கிவிங்குக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரும் நடக்கும். இது சபர் மண்டே என அழைக்கப்படும்.


ALSO READ: புது Realme 5G ஃபோன் வாங்க வாய்ப்பு; எங்கே தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR