கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!
MG Windsor EV Infinity View Glass Sunroof : ‘இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் சன்ரூஃப்’ கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்! அட்டகாசமான தோரணையில் பிற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வந்து விட்டது எம்ஜி விண்ட்ஸர் எலக்ட்ரிக் கார்
இந்தியாவில் செப்டம்பர் 11 அன்று அறிமுகமாவிருக்கும் MG Motor இன் Windsor EV, ஒரு தனித்துவமான கண்ணாடி கூரை கொண்ட கார். இதுவரை இப்படிப்பட்ட காரை பலர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். சாய்ந்த பின் இருக்கைகள் மற்றும் வேகமாக சார்ஜிங் கொண்ட 50.6 kWh பேட்டரி கொண்டுள்ள இந்த புதிய கார், Tata Curvv EV மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வெளியான காரின் டீசரில், இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப் என்ற விரிவான பனோரமிக் சன்ரூஃப் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Windsor EV, செப்டம்பர் 11 அன்று இந்திய சந்தையில் அறிமுகமாகவிருக்கும் நிலையில், வெளியாகியிருக்கும் டீஸர் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப்
வான பனோரமிக் சன்ரூஃப் கொண்ட இந்த காரில், மேற்புரத்தில் நிலையான கண்ணாடி கூரை இருக்கும். இதுபோன்ற அமைப்பு இதுவரை வந்ததில்லை. காரில் சென்றுக் கொண்டிருக்கும்போதே, கூரையின் வழியாக வானை ரசிக்கலாம். வழக்கமான சன்ரூஃப்களைப் போலல்லாமல், இதைத் திறக்க முடியாது,தனித்துவமான மற்றும் தடையற்ற வடிவமைப்பு கொண்ட வித்தியாசமான கார் இது.
விண்ட்சர் EV கார், ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மல்டிஃபங்க்ஸ்னல் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இந்தக் காரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாய்ந்த பின் இருக்கைகள் கொண்ட இந்தக் காரின் பின்னிருக்கைகள் 135 டிகிரி கோணத்தில் சாயக்கூடியவை என்பதால், பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் வசதியாக பயணிக்கலாம். பயணிகள் மிகவும் வசதியாக பயணிப்பதை உறுதி செய்கிறது.
காரின் தொழில்நுட்பக் குறிப்பு
JSW MG மோட்டார் இன்னும் இந்த புதிய காரின் தொழில்நுட்ப விவரங்களை பகிரங்கமாக வெளியிடவில்லை. ஆனால், Windsor EV காரில் 50.6 kWh பேட்டரி இருக்கும் என்றும், இதனால் கார் சார்ஜ் செய்யப்படும்போது துரிதமாக சார்ஜ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்தக் கார் 460 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 30 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.
வின்ட்சர் EV சுமார் 134 bhp மற்றும் 200 Nm டார்க்கை உற்பத்தி செய்யும். கிராஸ்ஓவர் மின்சார வாகனம் வின்ட்சர் EV, ZS EV மற்றும் Comet EV ஆகியவற்றைத் தொடர்ந்து MG மோட்டாரின் மின்சார கார் சந்தையில் மூன்றாவது காராக அறிமுகமாகிறது. இந்த மாடல் இந்திய மின்சார வாகனச் சந்தையில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ